இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது T20I : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெள்ளிக்கிழமை விளையாட உள்ளது. சத்தீஷ்கரின் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. முன்னதாக, இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டியில் கிளென் மேக்ஸ்வெல்லின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்திய அணி தற்போது 2-1 என முன்னிலையில் உள்ள நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால், தொடரை கைப்பற்ற முடியும். மறுபுறம் ஆஸ்திரேலிய அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்புடன் உள்ளது.
இந்தியா vs ஆஸ்திரேலியா நேருக்கு நேர் மோதல் புள்ளிவிபரம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் 29 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இந்திய அணி அதிக வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி 17 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மட்டும் முடிவில்லாமல் முடிந்துள்ளது. மேலும், இதில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 13 டி20 போட்டிகளில் இந்திய மைதானங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 13 போட்டிகளில், இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியா ஐந்தில் மட்டுமே வெற்றி பெற்று மிகவும் பின்தங்கியுள்ளது. இதற்கிடையே, ராய்ப்பூர் மைதானத்தில் இதற்கு முன்னர் எந்தவொரு சர்வதேச டி20 போட்டியிலும் இந்தியா விளையாடியதில்லை.
இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டி நடைபெறும் இடம், நேரம், ஒளிபரப்பு விவரங்கள்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டி டிசம்பர் 1ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்கு போட்டி தொடங்கும். ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் கலர்ஸ் சினிப்ளெக்ஸில் போட்டியை நேரலையில் பார்க்கலாம். மேலும் ஜியோ சினிமாவின் ஆப் மற்றும் இணையதளத்திலும் போட்டியை நேரில் பார்க்கலாம். இந்த மைதானத்தில் இதற்கு முன்னர் எந்தவொரு சர்வதேச டி20 போட்டியும் நடைபெறாத நிலையில், இங்கு ஆறு ஐபிஎல் போட்டிகள் மட்டுமே ஆட்டங்கள் விளையாடப்பட்டுள்ளன. அவற்றில் சராசரி அணியின் ஸ்கோர் 150 ஆக உள்ளது.
இந்திய முகாமில் இணைகிறார் ஷ்ரேயாஸ் ஐயர்
இளம் இந்திய பேட்டர்கள் நடந்து வரும் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் அச்சமற்ற அணுகுமுறை அவர்களுக்கு சிறப்பாக செயல்பட உதவியது. இதற்கிடையில், எஞ்சிய இரண்டு போட்டிகளில் திலக் வர்மாவுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியின் விளையாடும் லெவனில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவர் அணியுடன் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை டாப் ஆர்டர் பேட்டர்கள் பெரிதாக ரன் குவிக்கவில்லை. இரண்டு அணிகளிலும் உள்ள பந்து வீச்சாளர்களும் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்
இந்திய கிரிக்கெட் அணி (எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்) : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரின்கு சிங், திலக் வர்மா/ ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி (எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்) : டிராவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் சங்கா, கேன் ரிச்சர்ட்சன்.
டிரீம் 11 அணியின் கணிப்புகள்
ட்ரீம்11 அணியின் கணிப்பு (ஆப்ஷன் 1): ஜோஷ் இங்கிலிஸ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், டிராவிஸ் ஹெட், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), டிம் டேவிட், கிளென் மேக்ஸ்வெல், ரின்கு சிங், தன்வீர் சங்கா, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப். ட்ரீம்11 அணியின் கணிப்பு (ஆப்ஷன் 2): ஜோஷ் இங்கிலிஸ், டிராவிஸ் ஹெட், இஷான் கிஷான், யஷஸ்வி ஜெய்ஸ்வால் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ், தன்வீர் சங்கா, அர்ஷ்தீப் சிங் (துணை கேப்டன்), ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.