IND vs AUS 1st Test : ஜடேஜாவின் சுழலில் சிக்கியது ஆஸ்திரேலியா! முதல் நாள் முழுவதும் இந்தியா ஆதிக்கம்!
நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்சில் 177 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. இதற்கிடையில், அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை எட்டி புது சாதனை படைத்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் மார்னஸ் லாபுசேன் 49 ரன்கள் எடுத்தார். தவிர, ரோஹித் ஷர்மா அரைசதம் அடிக்க, ஆட்ட நேர முடிவில் இந்தியா 77/1 என்ற நிலையில் இருந்தது.
இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் : முதல் நாள் புள்ளி விபரங்கள்
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் அடுத்தடுத்து வெளியேறினர். 3வது விக்கெட்டுக்கு லாபுசாக்னே மற்றும் ஸ்டீவன் ஸ்மித் 82 ரன்கள் சேர்த்தனர். அவர்களை நீக்கிய ஜடேஜா இந்தியாவின் வேட்டையை தொடங்கினார். ஜடேஜாவுடன் அஸ்வினும் சேர, ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து 177 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை சமாளித்து நிலைத்து ஆடினார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 66 பந்துகளில் தனது 15வது அரை சதத்தை எட்டினார். ரோஹித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் (56) இருந்த நிலையில், ராகுல் 20 ரன்களில் வெளியேறினார். தற்போது ரோஹித் மற்றும் அஸ்வின் களத்தில் உள்ளனர்.