Page Loader
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 28, 2023
01:37 pm

செய்தி முன்னோட்டம்

சீனாவில் நடைபெற்ற நான்காவது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் தங்களது 100வது பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். ஆடவருக்கான 400 மீட்டர் டி47 போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் திலீப் மஹது காவிட் இந்தியாவுக்கு 100வது பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார். பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 100 பதக்கங்களை எட்டுவது இதுதான் முதல்முறையாகும். இதில் 26 தங்கம், 29 வெள்ளி, 45 வெண்கலம் அடங்கும். வீரர்களின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 100 பதக்கங்கள். இது நமது விளையாட்டு வீரர்களின் அதீத திறமை, கடின உழைப்பு மற்றும் உறுதிக்கு கிடைத்த பரிசாகும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்." எனத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

பிரதமர் மோடி வாழ்த்து