Page Loader
இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் : ஸ்னே ராணாவுக்கு பதிலாக மன்னத் காஷ்யப் அறிமுகம்
ஸ்னே ராணாவுக்கு பதிலாக மன்னத் காஷ்யப் அறிமுகம்

இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் : ஸ்னே ராணாவுக்கு பதிலாக மன்னத் காஷ்யப் அறிமுகம்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 02, 2024
01:50 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே மும்பையில் நடைபெறும் 3வது மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் ஸ்னே ராணாவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மன்னத் காஷ்யப் அறிமுகமாகிறார். முந்தைய ஆட்டத்தில் பூஜா வஸ்த்ராகருடன் மோதியதில் ஸ்னே ராணா காயமடைந்ததால் அவர் நீக்கப்பட்டு, மன்னத் விளையாடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். பாட்டியாலாவைச் சேர்ந்த மன்னத், களத்தில் தனது சிறப்பான இடதுகை சுழற்பந்து வீச்சுக்காக அறியப்படுகிறார். முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவரது பெயர் இடம் பெற்றிருந்தாலும், அதில் விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமாகியுள்ளார். இதற்கிடையே, போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

India vs Australia Women Cricket 3rd ODI Playing XI

3வது ஒருநாள் போட்டியில் விளையாடும் லெவன்

இந்திய கிரிக்கெட் அணி (விளையாடும் XI) : யாஸ்திகா பாட்டியா, ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ்(விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிகஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), தீப்தி சர்மா, மன்னத் காஷ்யப், அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பாட்டீல், ரேணுகா தாக்கூர் சிங். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி (விளையாடும் XI) : ஃபோப் லிட்ச்ஃபீல்ட், அலிசா ஹீலி(கேப்டன் & விக்கெட் கீப்பர்), எலிஸ் பெர்ரி, பெத் மூனி, தஹ்லியா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னர், அனாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம், அலனா கிங், கிம் கார்த், மேகன் ஷட்.