டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த 3வது இளம் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார். 22 வயதான ஜெய்ஸ்வால் தனது சாதனையை 277 பந்துகளில் நிறைவு செய்து, ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவை 350+ ரன்களுக்கு வழிநடத்தினார். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆட்டத்தில், ஜெய்ஸ்வாலுக்கு பிறகு அதிக ரன்களை எடுத்திருந்த இந்திய ஆட்டக்காரர் சுப்மான் கில் ஆவார். ஆனால், அவர் எடுத்திருந்த ரன்கள் வெறும் 34 ஆகும். ஜெய்ஸ்வால் 18 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் தனது இரட்டை சதத்தை விளாசினார்.
இதற்கு முன்பு இந்த சாதனையை படைத்த வீரர்கள்
முன்னதாக, ஜெய்ஸ்வாலின் அதிகபட்ச ஸ்கோர் 171 ஆகும். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அவரது அறிமுக போட்டியில் அவர் இந்த ரன்களை எடுத்திருந்தார். டெஸ்டில் இரட்டை சதம் அடித்த நான்காவது இடது கை வீரர் ஜெய்ஸ்வால் ஆவார். வினோத் காம்ப்லி, சவுரவ் கங்குலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் இதற்கு முன் இந்த சாதனையை படைத்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது இளம் இந்தியர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக, முன்னாள் பேட்டர், வினோத் காம்ப்லி 1993ஆம் ஆண்டில் இரட்டை சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த சாதனையை எட்டிய இரண்டாவது இளம் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் ஆவார்.