Page Loader
2022 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியின் பட்டியலை வெளியிட்டது ஐசிசி!
2022 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணி

2022 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியின் பட்டியலை வெளியிட்டது ஐசிசி!

எழுதியவர் Sekar Chinnappan
Jan 24, 2023
04:44 pm

செய்தி முன்னோட்டம்

ஐசிசி இன்று (ஜனவரி 24) 2022 ஆம் ஆண்டின் சிறந்த ஆடவர் மற்றும் மகளிர் ஒருநாள் அணியை அறிவித்துள்ளது. ஆடவர் அணியில் இந்திய பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஐசிசி நேற்று (ஜனவரி 23) வெளியிட்ட ஆடவர் சிறந்த டி20 அணி 2022இல் இடம் பெற்றிருந்த சிக்கந்தர் ராசா, சிறந்த ஒருநா அணியிலும் இடம் பெற்றுள்ளார். ஐசிசி ஆடவர் ஒருநாள் லெவன் 2022 : பாபர் அசாம் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், சாய் ஹோப், ஷ்ரேயாஸ் ஐயர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), சிக்கந்தர் ராசா, மெஹிடி ஹாசன் மிராஸ், அல்சாரி ஜோசப், முகமது சிராஜ், ட்ரெண்ட் போல்ட், ஆடம் ஜாம்பா.

ஐசிசி

ஐசிசி சிறந்த ஒருநாள் மகளிர் அணி 2022

ஆடவர் ஒருநாள் அணியை போல், சிறந்த ஒருநாள் போட்டிக்கான மகளிர் அணியின் பட்டியலையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஹர்மன்ப்ரீத் தவிர ஸ்மிரிதி மந்தனா மற்றும் ரேணுகா சிங் ஆகியோரும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். சிறந்த ஒருநாள் மகளிர் அணியில் இடம் பெற்றுள்ள பலரும், ஐசிசி ஏற்கனவே வெளியிட்ட மகளிர் டி20 அணியிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐசிசி மகளிர் ஒருநாள் லெவன் 2022 : அலீஷா ஹீலி (விக்கெட் கீப்பர்), ஸ்மிரிதி மந்தனா, லாரா வோல்வர்ட், நட் சிவர், பெத் மூனி, ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), அமெலியா கெர், சோஃபி எக்லெஸ்டோன், அயபோங்க காகா, ரேணுகா சிங், ஷப்னிம் இஸ்மாயில்