Page Loader
ஐசிசி சிறந்த மகளிர் டி20 அணி 2022 பட்டியல் வெளியீடு! நான்கு இந்தியர்களுக்கு இடம்!
ஐசிசி சிறந்த மகளிர் டி20 அணி 2022 பட்டியலில் நான்கு இந்தியர்களுக்கு இடம்

ஐசிசி சிறந்த மகளிர் டி20 அணி 2022 பட்டியல் வெளியீடு! நான்கு இந்தியர்களுக்கு இடம்!

எழுதியவர் Sekar Chinnappan
Jan 24, 2023
03:43 pm

செய்தி முன்னோட்டம்

ஐசிசி 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் டி20 அணியை அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக நியூசிலாந்து ஆல்ரவுண்டர் சோஃபி டிவைன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஐசிசி வெளியிட்டுள்ள ஆடவர் டி20 அணியில் இந்திய வீரர்கள் மூன்று பேர் இடம் பெற்றிருந்த நிலையில், மகளிர் டி20 அணியில் 4 இந்திய வீராங்கனைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி, இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா, ஆல் ரவுண்டர் தீப்தி ஷர்மா, விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

மகளிர் டி20 அணி

ஐசிசி மகளிர் டி20 அணி முழுமையான பட்டியல்

ஸ்மிருதி மந்தனா மற்றும் பெத் மூனி ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், டிவைன் மூன்றாவது இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். கார்ட்னர் டிவைனுக்கு அடுத்து நான்காவது இடத்திற்கு சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஆல் ரவுண்டர் தஹ்லியா, நிடா தார், தீப்தி அடுத்தடுத்த இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரிச்சா லோயர் ஆர்டரில் இணைக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளராக ரேணுகா சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சுழற்பந்து வீச்சுக்கு இனோகா மற்றும் சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐசிசி மகளிர் டி20 லெவன் 2022 : ஸ்மிருதி மந்தனா, பெத் மூனி, சோஃபி டிவைன் (கேப்டன்), ஆஷ் கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், நிடா தார், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சோஃபி எக்லெஸ்டோன், இனோகா ரணவீரா மற்றும் ரேணுகா சிங்.