
தொடர் தோல்வியால் அதிருப்தி : செல்சியா கால்பந்து அணி பயிற்சியாளர் கிரஹாம் பாட்டர் நீக்கம்
செய்தி முன்னோட்டம்
செல்சியா கால்பந்து அணி பெற்ற படுதோல்வியை அடுத்து பயிற்சியாளர் கிரஹாம் பாட்டர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 2) நீக்கப்பட்டார்.
முன்னதாக, இந்த சீசனில் £500 மில்லியன் யூரோவுக்கு அவரை செல்சியா மீண்டும் ஒப்பந்தம் செய்திருந்தது.
ஆனால் செல்சியா அணி தனது கடைசி 11 ஆட்டங்களில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மேலும் கடைசியாக கடந்த சனிக்கிழமையன்று (ஏப்ரல் 1) ஆஸ்டன் வில்லாவிடம் 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த பின்னர், ப்ளூஸ் பிரீமியர் லீக் அட்டவணையில் 11வது இடத்திற்கு சரிந்தது.
இதனால் அனைவரது அதிருப்தியும் பயிற்சியாளர் பாட்டர் மீது திரும்பியது.
கிரஹாம் பாட்டர்
இடைக்கால பயிற்சியாளராக புருனோ சால்டர் நியமனம்
பாட்டர் நீக்கப்பட்ட நிலையில், பிரைட்டன் அணியின் முன்னாள் டிபெண்டெர் புருனோ சால்டர் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிக்கு முன்னேறியுள்ள செல்சியா அங்கு நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட்டை எதிர்கொள்கிறார்கள்.
இதற்கான முதல் லெக் போட்டி தொடங்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பயிற்சியாளர் மாற்றம் அணியின் முன்னேற்றத்திற்கு எந்த அளவிற்கு உதவும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதற்கிடையே செல்சியா அணியின் உரிமையாளர்களான டோட் போஹ்லி மற்றும் பெஹ்தாத் எக்பாலி வெளியிட்ட ஒரு அறிக்கையில், "கிரஹாமை ஒரு பயிற்சியாளராகவும், ஒரு நபராகவும் நாங்கள் மிக உயர்ந்த மரியாதையைக் கொண்டுள்ளோம். அவர் எப்போதும் நேர்மையுடன் நடந்துகொண்டார். இந்த முடிவு எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது." என்று தெரிவித்துள்ளனர்.