Page Loader
ஏடிபி தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்
ஏடிபி தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார் நோவக் ஜோகோவி

ஏடிபி தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 12, 2023
06:06 pm

செய்தி முன்னோட்டம்

ஃபிரஞ்சு ஓபன் 2023 இல் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச் ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) நடந்த ஃபிரஞ்சு ஓபன் 2023 இறுதிப்போட்டியில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தியதன் மூலம் நோவக் ஜோகோவிச் தனது 23 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். இதன் மூலம் ஆடவர் டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனை படைத்தார். மேலும் இதன் மூலம் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த நோவக் ஜோகோவிச் இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்தார். முதலிடத்தில் இருந்த கார்லஸ் அல்கராஸ் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் ரஃபேல் நடால் 100 முதல் 100 இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post