
இந்திய கால்பந்து அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் சிவசக்தி நாராயணன்
செய்தி முன்னோட்டம்
மார்ச் 22 முதல் நடக்க உள்ள முத்தரப்பு கால்பந்து தொடரில் இந்திய அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள அணியில் தமிழகத்தை சேர்ந்த சிவசக்தி நாராயணனும் இடம் பெற்றுள்ளார்.
தமிழகத்தின் கண்டனூரை சேர்ந்த சிவசக்தி ஏழாம் வகுப்பு படித்தபோது கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு, அப்போது முதலே விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது ஐஎஸ்எல் தொடரில் பெங்களூரு அணிக்காக முன்கள வீரராக அவர் விளையாடி வருகிறார். சிவசக்திக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அணிக்கு அழைக்கப்பட்ட 23 பேரில், 14 பேர் புதன்கிழமை (மார்ச் 15) கொல்கத்தாவில் உள்ள பயிற்சி முகாமில் இணைந்துள்ள நிலையில், மீதமுள்ள ஒன்பது பேர் ஐஎஸ்எல் இறுதிப் போட்டிக்குப் பிறகு மார்ச் 19 அன்று சேருவார்கள்.
ட்விட்டர் அஞ்சல்
அமைச்சர் உதயநிதி ட்வீட்
இந்தியா-கிர்கிஸ்தான்- மியான்மர் நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் இந்திய அணிக்காக விளையாட சிவகங்கை கண்டனூரை சேர்ந்த சிவசக்தி நாராயணன் தேர்வாகியுள்ளார். மணிப்பூரில்
— Udhay (@Udhaystalin) March 15, 2023
வரும் 20-28 வரை நடக்கவுள்ள இப்போட்டியில் சாதிக்க தம்பிக்கு வாழ்த்துகள். #NAMMACHAMPION pic.twitter.com/mq8GWnWz9j