LOADING...
டி20 உலகக்கோப்பை 2026: கடைசி பந்து வரை திக் திக்! நேபாளத்தின் போராட்டத்தை முறியடித்த இங்கிலாந்து த்ரில் வெற்றி
டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் நேபாளத்தை வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி

டி20 உலகக்கோப்பை 2026: கடைசி பந்து வரை திக் திக்! நேபாளத்தின் போராட்டத்தை முறியடித்த இங்கிலாந்து த்ரில் வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Feb 08, 2026
06:54 pm

செய்தி முன்னோட்டம்

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பையின் 5 வது லீக் ஆட்டத்தில், குரூப் சி பிரிவில் உள்ள இங்கிலாந்து மற்றும் நேபாள அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹாரி புரூக் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். அனுபவம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக நேபாளம் ஈடுகொடுக்குமா என்ற எதிர்பார்ப்பிற்கு மத்தியில், ஆட்டம் கடைசிப் பந்து வரை விறுவிறுப்பாகச் சென்றது.

இங்கிலாந்து

இங்கிலாந்து பேட்டிங்: புரூக் மற்றும் பெத்தேல் அதிரடி

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்குத் தொடக்கம் சற்றுச் சறுக்கலாக அமைந்தது. பில் சால்ட் (1) மற்றும் ஜோஸ் பட்லர் (26) சீக்கிரம் ஆட்டமிழந்தனர். இருப்பினும், மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த ஜேக்கப் பெத்தேல் மற்றும் கேப்டன் ஹாரி புரூக் ஜோடி அணியை மீட்டெடுத்தது. ஜேக்கப் பெத்தேல் 35 பந்துகளில் 55 ரன்கள் குவித்து அசத்தினார். கேப்டன் ஹாரி புரூக் 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இறுதியில் வில் ஜேக்ஸின் அதிரடியான 39* (18 பந்துகள்) ரன்களின் உதவியுடன், இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. நேபாளம் தரப்பில் நந்தன் யாதவ் மற்றும் திபேந்திர சிங் ஐரி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போராட்டம்

நேபாளத்தின் வீராவேசப் போராட்டம்

185 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த நேபாள அணிக்குத் தொடக்க வீரர்கள் குஷால் புர்டெல் (29) மற்றும் ஆசிப் ஷேக் (7) நல்ல தொடக்கம் கொடுக்க முயன்றனர். விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்தாலும், திபேந்திர சிங் ஐரி (44) மற்றும் கேப்டன் ரோஹித் பௌடல் (39) ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சைத் திணறடித்தது. ஆட்டத்தின் திருப்புமுனையாக இறுதி ஓவர்களில் லோகேஷ் பாம் களமிறங்கி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைப் பதற வைத்தார். அவர் 15 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து வெற்றிக்காகப் போராடினார். குறிப்பாக ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய 18-வது ஓவரில் மூன்று சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ஆட்டத்தை நேபாளத்தின் பக்கம் திருப்பினார்.

Advertisement

சாம் கர்ரன்

சாம் கர்ரனின் 'ஐஸ்' கூல் பந்துவீச்சு

நேபாளத்தின் வெற்றிக்கு இறுதி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. இக்கட்டான இந்தச் சூழலில் பந்துவீசிய சாம் கர்ரன், மிகவும் நிதானமாகச் செயல்பட்டு யார்க்கர் பந்துகளைத் துல்லியமாக வீசினார். கடைசிப் பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், லோகேஷ் பாம் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் நேபாளம் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து, வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டது.

Advertisement