Page Loader
உலக டென்னிஸ் தரவரிசையில் நோவோக் ஜோகோவிச் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம்
உலக டென்னிஸ் தரவரிசையில் நோவோக் ஜோகோவிச் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம்

உலக டென்னிஸ் தரவரிசையில் நோவோக் ஜோகோவிச் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 03, 2023
08:05 pm

செய்தி முன்னோட்டம்

திங்கட்கிழமை (ஏப்ரல் 3) வெளியிடப்பட்ட சமீபத்திய ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் செர்பிய வீரர் நோவோக் ஜோகோவிச் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால், கடந்த மாதம் அமெரிக்கப் போட்டிகளைத் தவறவிட்ட போதிலும், திங்களன்று வெளியிடப்பட்ட ஏடிபி தரவரிசையில் நோவக் ஜோகோவிச் முதலிடத்திற்குத் திரும்பினார். முன்னதாக, ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் இந்தியன் வெல்ஸில் வெற்றி பெற்ற பிறகு ஜோகோவிச்சிடம் இருந்து முதலிடத்தை பறித்தார். ஆனால் வெள்ளியன்று (மார்ச் 31) நடந்த மியாமி ஓபனின் அரையிறுதியில் தோல்வியை தழுவி வெளியேறிய நிலையில், ஜோகோவிச்சுக்கு மீண்டும் முதலிடம் கிடைத்துள்ளது.

டென்னிஸ் தரவரிசை

டென்னிஸ் தரவரிசையில் இந்தியர்கள்

இந்தியர்களை பொறுத்தவரை இரட்டையர் பிரிவில், முதல் 100 இடங்களில் ரோகன் போபண்ணா 13வது இடத்திலும், யூகி பாம்ப்ரி 73வது இடத்திலும், சாகேத் மைனேனி 75வது இடத்திலும், ஜீவன் நெடுஞ்செழியன் 84வது இடத்திலும், என்.ஸ்ரீராம் பாலாஜி 88வது இடத்திலும் உள்ளனர். மேலும் அர்ஜுன் காதே 126வது இடத்திலும், அனிருத் சந்திரசேகர் 137வது இடத்திலும், ராம்குமார் ராமநாதன் 139வது இடத்திலும், திவிஜ் சரண் 142 இடத்திலும், என்.விஜய் சுந்தர் பிரசாந்த் 153வது இடத்திலும், புரவ் ராஜா 154வது இடத்திலும் உள்ளார். இது தவிர ஒற்றையர் பிரிவில், சுமித் நாகல் 372வது இடத்திலும், முகுந்த் சசிகுமார் 388வது இடத்திலும், ராம்குமார் ராமநாதன் 414வது இடத்திலும், பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 441வது இடத்திலும் உள்ளனர்.