
நியூசிலாந்தில் படுதோல்வி : இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்ன ராஜினாமா
செய்தி முன்னோட்டம்
திமுத் கருணாரத்ன அடுத்த மாதம் அயர்லாந்து டெஸ்ட் போட்டிக்குப் பிறகு டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் இலங்கை அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவிய நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். ஆனால் அவரது ராஜினாமாவை இலங்கை தேர்வுக்குழுவினர் இன்னும் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆனால் நான்கு வருடங்கள் கேப்டனாக இருக்கும் கருணாரத்னே ஏப்ரலில் 35 வயதை எட்டுவதால், 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு புதிய கேப்டனிடம் பொறுப்பை ஒப்படைப்பதில் உறுதியாக உள்ளார்.
அயர்லாந்து டெஸ்டுகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக இல்லை என்பதால், அது முக்கியத்துவம் வாய்ந்த தொடராக பார்க்கப்படவில்லை.\
ட்விட்டர் அஞ்சல்
திமுத் கருணாரத்ன ராஜினாமா
Breaking : Dimuth Karunaratne to step down from Test captaincy after Ireland tour https://t.co/hc3mmsdMjz
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) March 20, 2023