
மகளிர் ஐபிஎல் 2023 : குஜராத் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து டீன்ட்ரா டாட்டின் விலகல்
செய்தி முன்னோட்டம்
மகளிர் ஐபிஎல் முதல் சீசன் சனிக்கிழமை (மார்ச் 4) தொடங்க உள்ள நிலையில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான மேற்கிந்திய தீவுகளின் டீன்ட்ரா டாட்டின் மருத்துவ சிகிச்சை முடிந்து ஓய்வில் இருப்பதால் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிம் கார்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, பிப்ரவரியில் நடந்த ஏலத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் டீன்ட்ரா டாட்டினை ரூ.60 லட்சத்திற்கு வாங்கியிருந்தது.
அதே சமயம் கிம் கார்த் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ஐபிஎல் 2023
கிம் கார்த்தின் பின்னணி
தென்னாப்பிரிக்காவில் பிப்ரவரியில் நடந்து முடிந்த நடந்த மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் அவர் இருந்தார்.
முன்னர் அயர்லாந்து அணியில் ஆடிவந்த கார்த் பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்தார். உரிய நடைமுறைகளை முடித்து சமீபத்தில் தான் அந்த அணியில் இணைந்தார்.
இதையடுத்து உலகக்கோப்பைக்கு முன்னதாக நடந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களில் மட்டும் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடினார்.
லீக் போட்டிகளில் மகளிர் பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸுடன் மூன்று வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் தற்போது மகளிர் ஐபிஎல்லில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியில் இணைந்துள்ளார். குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீராங்கனையான பெத் மூனி வழிநடத்த உள்ளார்.