Page Loader
"நான் எங்க இருக்கேனு சொல்லுங்க" : வைரலாகும் டேவிட் வார்னரின் புகைப்படம்!
ஹிமாயூன் கல்லறைக்கு விசிட் அடித்த டேவிட் வார்னர்

"நான் எங்க இருக்கேனு சொல்லுங்க" : வைரலாகும் டேவிட் வார்னரின் புகைப்படம்!

எழுதியவர் Sekar Chinnappan
Feb 20, 2023
07:28 pm

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ளார். இரண்டாவது டெஸ்ட் டெல்லியில் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த போட்டிக்கு இன்னும் நிறைய நாட்கள் இடைவெளி இருப்பதால், தனது குடும்பத்துடன் டெல்லியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு விசிட் அடித்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் "குடும்பத்துடன் ஒரு நாள்! நான் எங்கே இருக்கிறேன் என்று உங்களால் யூகிக்க முடியுமா??" என ஹுமாயூனின் கல்லறையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். அவர் பதிவை வெளியிட்ட சில மணிநேரங்களில் 2.3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. பலரும் அதற்கு பதில் சொல்வதோடு, எங்கெல்லாம் செல்லலாம் என்ற ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

Instagram அஞ்சல்

டேவிட் வார்னரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்