
சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் : ஐபிஎல்லின் டான் யார்?
செய்தி முன்னோட்டம்
மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) ஐபிஎல் வரலாற்றில் ஐந்து கோப்பைகளுடன் மிகவும் வெற்றிகரமான அணியாக உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) நான்கு கோப்பைகளுடன் அதற்கடுத்த இடத்தில் உள்ளது.
ஐபிஎல் விளையாட்டில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக சிஎஸ்கே மற்றும் எம்ஐ அணிகள் மோதும் போட்டி இருக்கும்.
ஐபிஎல்லில் இரு அணிகளும் இதுவரை மொத்தம் 34 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் எம்ஐ 20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சிஎஸ்கே வெறும் 14 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சுரேஷ் ரெய்னா (710 ரன்கள்) அதிக ரன் எடுத்தவராவும், டுவைன் பிராவோ (35 விக்கெட்டுகள்) அதிக விக்கெட் எடுத்தவராகவும் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
2022 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளாக இருந்தாலும், 2022 சீசனில் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே 9வது இடத்திலும், எம்ஐ 10வது இடத்திலும் பரிதாபமாக வெளியேறியது.
2022 ஐபிஎல்லில் கடைசியாக இரு அணிகளும் மோதியபோது ரோஹித் ஷர்மா தலைமையிலான எம்ஐ தோனி தலைமையிலான சிஎஸ்கேவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து வெறும் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மும்பையின் டேனியல் சாம்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
எளிதான இலக்குடன் களமிறங்கிய மும்பை 14.5 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
தற்போது தொடங்க உள்ள சீசனில் ஏப்ரல் 8 மற்றும் மே 6 ஆகிய தினங்களில் இரண்டு முறை நேருக்கு நேர் மோத உள்ளன.