சவூதி ப்ரோ லீக் : கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 4 கோல்களால் அல் நாசர் அணி வெற்றி
சவூதி ப்ரோ லீக் கால்பந்து தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ வியாழக்கிழமை (பிப்ரவரி 9) நான்கு கோல்களை அடித்தார். மேலும் அல் நாசர் அணிக்காக, அல் வெஹ்தாவிற்கு எதிரான தனது 61வது கேரியர் ஹாட்ரிக் கோல்களையும் ரொனால்டோ அடித்தார். ரொனால்டோ 21வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடிக்கத் தொடங்கினார். இதன் மூலம் 500 கேரியர் லீக் கோல்களை எட்டினார். இடைவேளையின் போது அவர் தனது அணியை 2-0 என முன்னிலைப்படுத்திய நிலையில், இரண்டாவது பாதியில் மேலும் இரண்டு கோல்களை சேர்த்தார். இதன் மூலம் சவூதி ப்ரோ லீக்கில், ரொனால்டோ தனது கோல் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தியுள்ளார். கடந்த வாரம் அல் ஃபதேவுக்கு எதிராக அவர் தனது முதல் கோலை அடித்தது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் நான்கு கோல்கள் சாதனை
ரொனால்டோ ஒரு போட்டியில் நான்கு கோல்கள் அடிப்பது இது ஒன்பதாவது முறையாகும். இதற்கு முன்பு கடைசியாக ரோனால் நான்கு கோல்களை, 2019 இல் நடந்த லிதுவேனியாவுக்கு எதிரான ஐரோப்பிய உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் நடித்திருந்தார். இதன் பின்னர் சவூதி ப்ரோ லீக்கில், அல் நாசர் அணிக்காக 4 கோல்களை அடித்து போட்டியை 4-0 என்ற கணக்கில் அணி வெல்லவும் உதவினார். இதற்கிடையே, 1976 முதல் நடந்து வரும் சவூதி ப்ரோ லீக், இந்த ஆண்டு நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இணைந்ததால், அதிக பிரபலத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.