
பெண்கள் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம் : இன்று முதல் தொடங்குகிறது மகளிர் ஐபிஎல்
செய்தி முன்னோட்டம்
மகளிர் ஐபிஎல்லின் (WPL) முதல் சீசன் மும்பையில் சனிக்கிழமை (மார்ச் 4) தொடங்க உள்ளது.
இரவு 7.30 மணிக்கு முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடைபெறுகிறது.
அதற்கு முன்னதாக மாலை 5.30 மணிக்கு மகளிர் ஐபிஎல்லின் தொடக்க விழா டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் க்ரிதி சனோன் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரின் நடன நிகழ்ச்சி மற்றும் இசைக்கலைஞர் ஏபி தில்லானின் இசை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.
இதற்கிடையே மகளிர் ஐபிஎல்லின் அதிகாரப்பூர்வ கீதத்தை சங்கர் மகாதேவன் மேடையில் பாட உள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
மகளிர் ஐபிஎல் தொடக்க விழா
6 artists, 1 amazing song, and only 1 day to go!
— Women's Premier League (WPL) (@wplt20) March 3, 2023
Sing along to the anthem of the #TATAWPL tomorrow and be part of the biggest event in women's T20 cricket, kyunki yeh toh bas shuruat hai! @JayShah #YehTohBasShuruatHai #TataWPL2023 #TataWPLAnthem #AnthemLaunch pic.twitter.com/SO0tbSB1Uy