LOADING...
எனக்கே ரெட் கார்டா? நடுவரின் கன்னத்தில் 'பளார்' விட்ட பயிற்சியாளர்
நடுவரின் கன்னத்தில் பளார் விட்ட பயிற்சியாளர்

எனக்கே ரெட் கார்டா? நடுவரின் கன்னத்தில் 'பளார்' விட்ட பயிற்சியாளர்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 24, 2023
07:38 pm

செய்தி முன்னோட்டம்

ஒரு சீன கால்பந்து பயிற்சியாளர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) இரண்டாம் அடுக்கு ஆட்டத்தின் போது, போட்டி நடுவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் நடந்து வரும் லீக் ஒன் போட்டியின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. லியோனிங் சிட்டி என்ற குழுவின் பயிற்சியாளர் சின் டுவான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். ஆட்டத்தின் முதல் பாதியின் போது டுவான் அணிக்கு எதிராக பெனால்டி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நடுவர் சென் ஹாவோவுடன் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து நடுவர் அவருக்கு சிகப்பு அட்டை கொடுத்து வெளியேற்றியதால் கோபப்பட்ட டுவான், நடுவரை உடல்ரீதியாக தாக்கினார். இந்த சம்பவத்தின் காணொளி வைரலாகி சர்ச்சையான நிலையில், சின் டுவான் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

நடுவரை தாக்கிய பயிற்சியாளர்