Page Loader
INDvsAUS 3வது ஒருநாள் போட்டி : நள்ளிரவு முதல் காத்திருந்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நள்ளிரவு முதல் காத்திருந்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள்

INDvsAUS 3வது ஒருநாள் போட்டி : நள்ளிரவு முதல் காத்திருந்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 18, 2023
01:21 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நேரில் காண ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி செல்கின்றனர். சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 2021க்கு பிறகு சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகள் எதுவும் நடக்காத நிலையில், தற்போது மார்ச் 22 ஆம் தேதி பகலிரவு போட்டியாக நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் விநியோகம் சனிக்கிழமை (மார்ச் 18) காலை 11 மணி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு முதலே ரசிகர்கள் காத்திருந்து டிக்கெட் வாங்கி செல்கின்றனர். டிக்கெட் எடுக்க வந்த பெண்கள் சிலர். மகளிருக்கு தனி கவுன்ட்டர் இருந்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

சன் நியூஸ் ட்வீட்