
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிடல்ஸ் வாய்ப்பை நிராகரித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் டக்கெட்
செய்தி முன்னோட்டம்
டெல்லி கேப்பிடல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான கடைசி பந்தில் பரபரப்பான வெற்றியுடன் 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) தொடரை வெற்றியுடன் தொடங்கியது.
இருப்பினும், இங்கிலாந்தின் ஹாரி புரூக் தனிப்பட்ட காரணங்களால் போட்டிகளில் இருந்து விலகியதால், சீசன் தொடங்குவதற்கு முன்பே அந்த அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.
மெகா ஏலத்தில் ஹாரி புரூக்கை ரூ.6.25 கோடிக்கு வாங்கியதால், அவர் இல்லாதது குறிப்பிடத்தக்க பின்னடைவாக அமைந்தது.
இந்நிலையில், ஹாரி புரூக் விலகியதைத் தொடர்ந்து, டெல்லி கேப்பிடல்ஸ் அணி இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட்டை மாற்று வீரராக சேர்க்க அணுகியதாக தகவல் வெளியானது.
இருப்பினும், ஈஎஸ்பிஎன்கிரிக்இன்போ அறிக்கையின்படி, பென் டக்கெட் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
விருப்பமில்லை
ஐபிஎல்லில் சேர விருப்பமில்லை
முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகனும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
பென் டக்கெட் மெகா ஏலத்தில் பதிவு செய்த போதிலும், ஐபிஎல்லில் சேர விரும்பவில்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
போட்டி ஏற்கனவே நடந்து வரும் நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி இன்னும் ஹாரி புரூக்கிற்கு மாற்றாக யாரையும் அறிவிக்கவில்லை.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, விரைவில் ஒரு வெளிநாட்டு வீரரை ஹாரி ப்ரூக்கிற்கு பதிலாக ஒப்பந்தம் செய்யும் என்று நம்புகிறது.
இதற்கிடையே, டெல்லி கேப்பிடல்ஸ் தனது அடுத்த போட்டியில் மார்ச் 30 அன்று விசாகப்பட்டினத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது.