
ஐபிஎல் 2023 : கொரோனா அதிகரிப்பால் கவலை! எச்சரிக்கையாக இருக்குமாறு பிசிசிஐ அறிவுரை!
செய்தி முன்னோட்டம்
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல்லுக்காக புதிய கொரோனா ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு தான் மீண்டும் பழைய முறைக்கு திரும்பியுள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவது பிசிசிஐ வட்டாரத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் கொரோனாவைத் தடுத்த கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பிசிசிஐ அணியின் உரிமையாளர்கள், வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் ஐபிஎல்லில் கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்க மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
பிசிசிஐ
பிசிசிஐ அணிகளுக்கு வழங்கிய ஆலோசனையின் முழு விபரம்
பிசிசிஐ அனுப்பியுள்ள ஆலோசனை கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவது பின்வருமாறு:-
ஐபிஎல்லில் கோவிட் குறைக்க அனைவரையும் மிகவும் எச்சரிக்கையாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
பாதிப்புகள் அதிகரித்து வருவதை நாங்கள் அறிவோம், ஆனால் கவலைப்பட ஒன்றுமில்லை. கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு வீரர்களையும் உதவி ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
வீரர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் மிக முக்கியம். அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும். எங்கள் குழு நிலைமையை கண்காணித்து வருகிறது. மேலும் கொரோனா நோயைப் பொருத்தவரை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதனால் கவலைப்பட ஒன்றுமில்லை
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்தியாவில் இன்று புதிதாக 4,435 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.