LOADING...
நியூசிலாந்து ஒருநாள் தொடர் 2026: கேப்டன் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு 
நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

நியூசிலாந்து ஒருநாள் தொடர் 2026: கேப்டன் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு 

எழுதியவர் Sekar Chinnappan
Jan 03, 2026
05:28 pm

செய்தி முன்னோட்டம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 3) அறிவித்துள்ளது. இந்தத் தொடருக்கு ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராகக் களமிறங்கும் 15 பேர் கொண்ட பலமான இந்திய அணி விபரம் பின்வருமாறு: பேட்டர்கள்: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்-ஃபிட்னஸைப் பொறுத்து), யஷஸ்வி ஜெய்ஸ்வால். விக்கெட் கீப்பர்கள்: கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட். ஆல்-ரவுண்டர்கள்: ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி. பந்துவீச்சாளர்கள்: முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்.

முக்கிய மாற்றங்கள்

முக்கிய மாற்றங்கள் மற்றும் முடிவுகள்

இந்திய கிரிக்கெட் அணி தேர்வில் சில கவனிக்கத்தக்க அம்சங்கள் உள்ளன. அதன்படி, டி20 உலகக்கோப்பை நெருங்குவதால், பணிச்சுமை மேலாண்மை காரணமாக ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோருக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விஜய் ஹசாரே தொடரில் அதிரடியாக 67 ரன்கள் குவித்ததைத் தொடர்ந்து, ரிஷப் பண்ட் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். காயத்திலிருந்து மீண்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் விளையாடுவது பிசிசிஐ மருத்துவக் குழுவின் இறுதி அனுமதியைப் பொறுத்தது. இந்தத் தொடரின் மூன்று போட்டிகளும் ஜனவரி 11 (வதோதரா), ஜனவரி 14 (ராஜ்கோட்) மற்றும் ஜனவரி 18 (இந்தூர்) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. அனைத்துப் போட்டிகளும் மதியம் 1:30 மணிக்கு தொடங்கும்.

Advertisement