ஏடிகே மோஹுன் பாகன் கால்பந்து அணியின் பெயர் மாற்றம்! வெளியானது அறிவிப்பு!
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து அணியான ஏடிகே மோஹுன் பாகன், ஜூன் 1, 2023 முதல் மோஹுன் பாகன் சூப்பர் ஜெயண்ட் என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அந்த கிளப் புதன்கிழமை (மே 17) தெரிவித்துள்ளது. முன்னதாக, ஐஎஸ்எல் கிளப் ஏடிகே மோஹன் பகான் ஏசியுடன் இணைந்த பிறகு 2020 இல் ஏடிகே மோஹுன் பாகன் உருவாக்கப்பட்டது. ஏடிகே உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பெரும்பான்மையான பங்கை வைத்திருந்ததால், புதிய நிறுவனம் அதன் பெயரில் ஏடிகேவை தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்தது. ஆனால் மோஹுன் பாகன் ரசிகர்கள் ஏடிகேயை அகற்ற வலியுறுத்தி வந்ததோடு, போட்டிகளையும் புறக்கணிப்பதாக மிரட்டியதால் இந்த முடிவை அணி எடுத்துள்ளது.