Page Loader
பொள்ளாச்சி டு பிலிப்பைன்ஸ்; 86 வயதில் ஆசிய போட்டியில் 4 தங்கம் வென்ற தமிழக வீரர்
86 வயதில் ஆசிய போட்டியில் 4 தங்கம் வென்ற தமிழக வீரர்

பொள்ளாச்சி டு பிலிப்பைன்ஸ்; 86 வயதில் ஆசிய போட்டியில் 4 தங்கம் வென்ற தமிழக வீரர்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 17, 2023
08:08 pm

செய்தி முன்னோட்டம்

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 86 வயதான கே.சுப்பிரமணியம் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில், தடகளப் பிரிவில் சுப்பு என்றழைக்கப்படும் சுப்ரமணியம், 85 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகியவற்றில் முதலிடம் பெற்றார். பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பு இளம் வயதிலேயே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டாலும், சூழ்நிலை காரணமாக அப்போது எதுவும் செய்ய முடியாத நிலையில், தற்போது தனது 80களில், தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவர் மட்டுமல்லாது, தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் சிலரும் பதக்கங்களை வென்ற நிலையில், அவர்களை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post