Loading...
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: 114 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை, பிரதமர் மோடி பாராட்டு
நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள பாரா தடகள வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: 114 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை, பிரதமர் மோடி பாராட்டு

எழுதியவர் Vasuki
Oct 25, 2026
01:49 pm

செய்தி முன்னோட்டம்

ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று முடிந்த 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியக் குழுவினர் 114 பதக்கங்களை வென்று தங்களது மிகச் சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்பாக 2023 ஹாங்சோ போட்டியில் வென்ற 111 பதக்கங்கள் (29 தங்கம்) என்ற சாதனையைத் தகர்த்து, தற்போது 30 தங்கம், 35 வெள்ளி மற்றும் 45 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா இத்தொடரில் ஒட்டுமொத்தப் பதக்கப் பட்டியலில் சீனா, ஜப்பான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தைப் பிடித்துப் பெருமை சேர்த்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாட்டுக்கு அளப்பரிய பெருமையும் மகிழ்ச்சியும் தேடித்தந்த வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

114 பதக்கங்களுள்

பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

வீரர்களின் இந்தச் சாதனை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "சமீபத்தில் நிறைவடைந்த 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் நமது பாரா தடகள வீரர்கள் நிகழ்த்தியுள்ள சாதனை மெய்சிலிர்க்க வைக்கிறது.

சாதனை எண்ணிக்கையான 114 பதக்கங்களுடன், இப்போட்டி வரலாற்றிலேயே இந்தியாவின் மிகச் சிறந்த செயல்பாட்டை நமது வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் அளப்பரிய பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் தரும் தருணம். தங்களது அசாத்திய மன உறுதிக்காக இந்தியக் குழுவில் இடம்பெற்ற ஒவ்வொரு உறுப்பினரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

இந்தச் சாதனையில் பங்களித்த ஒவ்வொரு வீரரும் எண்ணற்ற இந்தியர்களுக்குப் பெரும் உத்வேகமாகத் திகழ்கின்றனர்" என்று பாராட்டியுள்ளார்.

4-வது இடம்

பதக்கப் பட்டியல் விவரம்

இத்தொடரில் இந்திய தடகள வீரர்கள் மட்டும் 22 தங்கம், 19 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து பேட்மிண்டன் பிரிவில் 16 பதக்கங்களும் (3 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம்), நீச்சலில் 11 பதக்கங்களும், டேபிள் டென்னிஸில் 7, வில்வித்தையில் 6 மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் 5 பதக்கங்களும் கிடைத்தன. ஜூடோ மற்றும் பளுதூக்குதல் பிரிவுகளில் தலா 2 பதக்கங்கள் வெல்லப்பட்டன.

ஒட்டுமொத்தப் பதக்கப் பட்டியலில் சீனா, ஜப்பான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ADVERTISEMENT

உலக சாதனைகள்

உலக சாதனைகளை முறியடித்த இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்றது மட்டுமின்றி, பல உலக சாதனைகளையும் தகர்த்தெறிந்தனர்.

ஆடவர் 400 மீட்டர் டி44 ஓட்டப்பந்தயத்தில் சந்தீப் குமார் 52.28 வினாடிகளில் இலக்கைத் தொட்டு புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றார்.

ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்37/38 பிரிவில் ஹானி 60.49 மீட்டர் தூரம் வீசி உலக சாதனை படைத்து தங்கத்தைக் கைப்பற்றினார்.

மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் எஸ்.ஹெச்.1 துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் மோனா அகர்வால் 357.5 புள்ளிகளுடன் புதிய உலக சாதனையைப் படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.

கலப்பு காம்பவுண்ட் வில்வித்தை தகுதிச் சுற்றில் ஷீத்தல் தேவி மற்றும் தோமன் குமார் இணை 1,402 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனை படைத்து அசத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT