ஆண்டுக்கு 400 மில்லியன் யூரோ ஊதியம்! சவூதி கால்பந்து கிளப்பிற்கு இடம் பெயரும் லியோனல் மெஸ்ஸி?
செய்தி முன்னோட்டம்
பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கால்பந்து கிளப் அணியின் முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி எஃப்சி பார்சிலோனாவில் தனது நேரத்தைக் குறைத்து, சவூதி அரேபியாவில் உள்ள அல்-ஹிலால் அணியுடன் சேர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிஎஸ்ஜி அணி நிர்வாகத்தின் அனுமதியின்றி சவூதி அரேபியாவிற்கு பயணம் செய்ததற்காக மெஸ்ஸி இரண்டு வாரங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இந்த தகவல் கசிந்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் பிஎஸ்ஜியில் மெஸ்ஸியின் ஒப்பந்தம் முடிவுக்கு வர உள்ள நிலையில், நடப்பு சீசன் முடியும் வரையில் பிஎஸ்ஜியில் மெஸ்ஸி விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், சமீபத்திய நிகழ்வுகளால், இந்த நிலைமை கடுமையாக மாறிவிட்டது.
al hilal offer 400 mn euro to messi
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு போட்டியாக சவூதி ப்ரோ லீக்கில் களமிறங்கும் லியோனல் மெஸ்ஸி
எஃப்சி பார்சிலோனா மற்றும் பிஎஸ்ஜியுடன் நீண்ட காலமாக இருந்த லியோனல் மெஸ்ஸி, சவூதி அரேபியா ப்ரோ லீக்கில் அல்-ஹிலாலுக்கு இடம் பெயர்வது கால்பந்து உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவில் விளையாடுவதே மெஸ்ஸியின் முன்னுரிமையாக இருந்தாலும், சவூதி அரேபிய கிளப் அல் ஹிலால் இதுவரை இல்லாத அளவுக்கு ஆண்டுக்கு 400 மில்லியன் யூரோவை சம்பளமாக வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் இறுதியானால் சவூதி ப்ரோ லீக்கில் அல் நாசர் அணியில் ஆண்டுக்கு 223 மில்லியன் யூரோ சம்பளமாக பெறும் கிறிஸ்டியானோ ரொனால்டோவை லியோனல் மெஸ்ஸி மிஞ்சுவார்.