
75 கிலோ எடையை தூக்கி ஹரியானாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி சாதனை
செய்தி முன்னோட்டம்
ஹரியானா: இளம் பளுதூக்கும் வீராங்கனை அர்ஷியா கோஸ்வாமி தனது அபாரமான பளு தூக்கும் திறமையை வெளிப்படுத்தி இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஹரியானாவின் பஞ்ச்குலாவைச் சேர்ந்த ஒன்பது வயது பளுதூக்கும் வீராங்கனை அர்ஷியா கோஸ்வாமியின் மிகச் சமீபத்திய சாதனை, சமூக ஊடக பயனர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
அர்ஷியா கோஸ்வாமி ஜிம்மில் ஹெவி டெட்லிஃப்ட் செய்யும் வீடியோ பிப்ரவரி 29ஆம் தேதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டது.
அதன் பிறகு, ஏப்ரல் 7 ஆம் தேதி விஷனலெட்ஜ் அந்த வீடியோவை பகிர்ந்த பிறகு அது தற்போது வைரலாகி வருகிறது.
இணையத்தில் வெளியிடப்பட்டதிலிருந்து, அந்த வீடியோ 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ஹரியானாவைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் சாதனை வைரல்
Arshia Goswami, India's 'youngest deadlifter' who can lift 75 kg (165 lbs) and is just 9 years old.
— Massimo (@Rainmaker1973) April 8, 2024
[📹 fit_arshia]pic.twitter.com/jv4kze4vv2