LOADING...
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக விராட் கோலியின் புள்ளி விபரங்கள்
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக விராட் கோலியின் புள்ளி விபரங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக விராட் கோலியின் புள்ளி விபரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 17, 2023
01:03 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2023 சீசனின் 24வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சென்னை சூப்பர் கிங்ஸை திங்கட்கிழமை (ஏப்ரல் 17) எதிர்கொள்ள உள்ளது. போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் திங்கட்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிரான போட்டியிலும் அதை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கேவுக்கு எதிராக 30 ஆட்டங்களில், கோலி 39.16 சராசரியில் 979 ரன்கள் குவித்துள்ளார். சிஎஸ்கேவுக்கு எதிராக அவரது அதிகபட்ச ஸ்கோர் 90* ஆகும். மேலும் ஒன்பது அரைசதங்களையும் அடித்துள்ளார்.

will kohli beat dhawan record against csk

தவானின் சாதனையை சமன் செய்வாரா கோலி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,000 ரன்களை எட்டுவதற்கு விராட் கோலிக்கு இன்னும் 21 ரன்கள் தேவை. இதை எடுத்தால் ஷிகர் தவானுக்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். தவான் தற்போது சிஎஸ்கே அணிக்கு எதிராக 44.73 சராசரியில் 1,029 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கிடையே ஒட்டுமொத்த ஐபிஎல்லில் கோலி 36.76 சராசரியில் 6,838 ரன்கள் எடுத்துள்ளார். அவர் ஐந்து சதங்கள் மற்றும் 47 அரைசதங்களை 113 என்ற சிறந்த ஸ்கோருடன் அடித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் அடித்தவர்களில் கோலிக்கு அடுத்தபடியாக தவான் 6,477 ரன்கள் குவித்து இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.