YouTube Music அதிரடி மாற்றம்: இனி லிரிக்ஸ் பார்க்க பணம் கட்டணுமா?
செய்தி முன்னோட்டம்
யூடியூப் மியூசிக் தனது இலவச பயனர்களுக்கு மாதத்திற்கு இத்தனை பாடல்கள் மட்டுமே லிரிக்ஸ் பார்க்க முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை (Paywall) அமல்படுத்த தொடங்கியுள்ளது. சில பயனர்களுக்கு மாதத்திற்கு 5 பாடல்கள் மட்டுமே முழுமையாக லிரிக்ஸ் பார்க்கும் வசதி வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டியவுடன், பாடலின் ஆரம்ப வரிகள் மட்டுமே திரையில் தெரியும்; மற்றவை மறைக்கப்படும் (Blurred). லிரிக்ஸ் பகுதியை திறக்கும்போது, இன்னும் எத்தனை பாடல்களுக்கு இலவசமாக லிரிக்ஸ் பார்க்க முடியும் என்ற விவரம் ஒரு பார் (Bar) மூலம் காட்டப்படுகிறது. முழு லிரிக்ஸையும் பார்க்க வேண்டுமென்றால், 'யூடியூப் மியூசிக் பிரீமியம்' (YouTube Music Premium) சந்தாவிற்கு மாறும்படி பயனர்களுக்கு அறிவிப்புகள் அனுப்பப்படுகின்றன.
சந்தை போட்டி
சந்தையின் போட்டி நிலை
இந்த கட்டுப்பாடு அனைத்து பயனர்களுக்கும் ஒரே நேரத்தில் பொருந்துவதாக தெரியவில்லை. சில இலவச கணக்குகள் இன்னும் வரம்புகள் இல்லாமல் முழு பாடல் வரிகளையும் காட்டுகின்றன, இது, கூகிள் பிராந்தியம் அல்லது கணக்கு வகையின் அடிப்படையில் மாற்றத்தை வெளியிடுகிறது என்பதைக் குறிக்கிறது. இதற்கு போட்டியாக உள்ள Spotify நிறுவனம், முன்னதாக இதுபோன்ற லிரிக்ஸ் கட்டுப்பாட்டை சோதித்து பார்த்தாலும், தற்போது இலவச பயனர்களுக்கும் லிரிக்ஸ் பார்க்கும் வசதியை தொடர்ந்து வழங்கி வருகிறது. யூடியூப் மியூசிக்கின் இந்த நடவடிக்கை, இலவச பயனர்களை பிரீமியம் சந்தாதாரர்களாக மாற்றும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், லிரிக்ஸிற்காக மட்டும் பணம் செலுத்த விரும்பாத பயனர்கள் Shazam போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்த தொடங்கக்கூடும் எனவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.