'Go Live Together': யூடியூப் அறிமுகப்படுத்திய ஸ்ட்ரீமிங் அப்டேட் - என்ன பலன்?
கூகுளுக்குச் சொந்தமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப், கிரியேட்டர்களுக்கு, யூடியூப் 'Go Live Together' என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த அம்சமானது இரண்டு பயனர்கள் ஒன்றாக சேர்த்து லைவ்ஸ்ட்ரீம் செய்ய பயன்படுகிறது. இதுகுறித்து, யூடியூப் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோ லைவ் டுகெதரை அறிமுகப்படுத்துவது, உங்கள் ஃபோனிலிருந்து ஒரு கோ-ஸ்ட்ரீமை எளிதாகத் தொடங்குவதற்கும் விருந்தினர்களை அழைப்பதற்கும் ஒரு புதிய வழி. கோ-ஸ்ட்ரீம்களை ஹோஸ்ட் செய்ய படைப்பாளர்களுக்கு 50+ சப்ஸ்கள் தேவை, ஆனால் யார் வேண்டுமானாலும் விருந்தினராக இருக்கலாம். இதில், ஏற்கனவே இருக்கும் நேரலை ஆப்ஷனின் கீழ் இந்த புதிய அம்சம் அமைந்திருக்கும். கிரியேட்டர்கள் தங்கள் கணினிகளைப் பயன்படுத்தி விருந்தினருடன் நேரலை ஸ்ட்ரீமைத் திட்டமிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.