Page Loader
விவோவின் புதிய T2 5G.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ 
எப்படி இருக்கிறது விவோ T2 5G?

விவோவின் புதிய T2 5G.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ 

எழுதியவர் Prasanna Venkatesh
Apr 30, 2023
02:12 pm

செய்தி முன்னோட்டம்

2021-ம் ஆண்டு வெளியான விவோ T1 மொபைலின் அப்கிரேடட் வெர்ஷனாக T2 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது விவோ. டிசைன் முதல் கேமார வரை அனைத்தையும் கொஞ்சம் அப்கிரேடு செய்திருக்கிறது விவோ. எப்படி இருக்கிறது இந்த 'விவோ T2 5G'? வசதிகள்: 6.38 இன்ச் AMOLED டிஸ்பிளே ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸர் 64MP+2MP ரியர் கேமரா: 16MP செல்ஃபி கேமரா 4,500 mAh பேட்டரி 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஆண்ட்ராய்டு 13 5G வசதி விலை: 6 GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் - ரூ.18,999 8 GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் - ரூ.20,999

மொபைல் ரிவ்யூ

பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது? 

T1 ஸ்மார்போனில் இருந்து நிறையவே மாற்றங்களைச் செய்திருக்கிறது விவோ. பாலிகார்பனேட் பாடி மற்றும் ஃபிரேமை பயன்படுத்தியிருக்கிறது விவோ. இதன் கிளாஸி ஃபினிஷ் மற்றும் டூயல்டோன் கலர் பார்க்க ப்ரீமியமான லுக்கைக் கொடுக்கிறது. இதன் ப்ராசஸர் தினசரிப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம், எந்த பிரச்சினையும் இருக்காது. கேமிங்குக்கு ஓகேவாக இருக்கிறது. சிறப்பான பேட்டரி பெர்ஃபாமன்ஸைக் கொண்டிருக்கிறது இந்த T2. அதோடு 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கும் போது, பேட்டரி குறித்த கவலையே தேவையில்லை. T1 இருந்தது இல்லாமல் முற்றிலும் புதிய கேமரா மாடியூலை T2-வில் கொடுத்திருக்கிறது விவோ. பயன்பாட்டிற்கு இந்த புதிய கேமரா நன்றாகவே இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இல்லாதது மைனஸ். மற்றபடி ரூ.20,000-குள்ளான ஸ்மார்ட்போன் செக்மண்டில் சிறந்த மொபைல் இந்த T2 5G.