யூனியன் பட்ஜெட் 2023; பொருளாதாரத்தில் இந்திய 5வது பெரிய நாடாக உள்ளது;
யூனியன் பட்ஜெட் 2023; பொருளாதாரத்தில் இந்தியா 5வது பெரிய நாடாக உள்ளது; 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 9 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா டோஸ் தடுப்பூசி போட்டுள்ளோம். கொரோனா காலத்தில் 28 மாதத்தில் 80 கோடி மக்களுக்கு உணவு தானியம் வழங்கினோம் மேலும், ஜி20-க்கு தலைமை வகிப்பதால் இந்தியாவின் பொருளாதாரம் மேம்படும். 9 ஆண்டுகளில் 9 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய பொருளாதார மதிப்பு 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது- நிர்மலா சீதாராமன் பெருமிதம்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்
இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை இந்த ஆண்டு 6.4% ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5.9% ஆக குறையும் என்று Bloomberg கணக்கெடுப்பு கணித்துள்ளது. பசுமை எரிசக்தி உற்பத்திக்கு தொடர்ந்து முன்னுரிமை. ஐசிஎம்ஆர் நிலையங்களை தனியாரும் பயன்படுத்தலாம். 157 புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும். வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தத் தேவையான திட்டங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. விவசாயிகள், பெண்கள் உள்ளிட்ட அனைவருக்குமான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக உலக நாடுகள் பாராட்டியுள்ளன. சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியாவின் வளர்ச்சியில் வீழ்ச்சியைக் கணித்துள்ளது. அடுத்து, மத்திய மொத்த நிதிப் பற்றாக்குறையை 6.4% ஆகக் கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்டு, இது 2025க்குள் 3.5% ஆகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.