Page Loader
போலி அழைப்புகளைக் தடுக்க புதிய நடவடிக்கை.. அறிமுகப்படுத்தியது TRAI 
போலி அழைப்புகளைத் தடுக்க நடவடிக்கை

போலி அழைப்புகளைக் தடுக்க புதிய நடவடிக்கை.. அறிமுகப்படுத்தியது TRAI 

எழுதியவர் Prasanna Venkatesh
May 01, 2023
01:57 pm

செய்தி முன்னோட்டம்

மொபைல் பயனர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று அடிக்கடி வரும் போலியான மற்றும் விளம்பர அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள். இதனைத் தடுக்க இன்று முதல் புதிய நடைமுறை ஒன்று அமல்படுத்தப்படுவதா தெரிவித்திருக்கிறது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI). இன்று (மே 1) முதல் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளில் AI ஃபில்டர்களைப் பயன்படுத்துவதை கட்டாமாக்கியிருக்கிறது ட்ராய். இதன் மூலம் போலியான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் தடுக்கப்பட்டு மோசடிகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே இதனை பயன்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கும் நிலையில், ஜியோ நிறுவனம் விரைவில் இந்த வசதியை பயன்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்பு

மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை: 

மொபைல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் பயனர்கள் ஏமாற்றப்பட்டு வருவது தொடர்கதையாகி வரும் நிலையில், அதனைத் தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது ட்ராய். அதன் ஒரு பகுதியாகவே மேற்கூறிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், விளம்பர அழைப்புகளுக்கு 10 இலக்க மொபைல் எண்ணைப் பயன்படுத்துவதையும் நிறுத்த வேண்டும் என தொலைதொடர்பு நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது ட்ராய். அதோடு ஒருவரின் மொபைலுக்கு அழைப்பு ஒன்று வரும் போதே, அவரது பெயருடன் புகைப்படத்தையும் காட்டும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது ட்ராய். ஆனால், தனிபுரிமைப் பாதுகாப்புக் காரணங்கள் கருதி அந்தத் திட்டத்தை செயல்படுத்த தொலை்தொடர்பு நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.