Loading...
கிளாட் ஏஐ மூலம் 72 மணி நேரத்தில் ஓபன்ஏஐ ஹேக்கிங்! உலகை அதிர வைத்த 3 இந்திய இளைஞர்கள்
கிளாட் ஏஐ மூலம் 72 மணி நேரத்தில் ஓபன்ஏஐயை ஹேக் செய்து அசரவைத்த இந்திய இளைஞர்கள்

கிளாட் ஏஐ மூலம் 72 மணி நேரத்தில் ஓபன்ஏஐ ஹேக்கிங்! உலகை அதிர வைத்த 3 இந்திய இளைஞர்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 20, 2026
09:34 pm

செய்தி முன்னோட்டம்

ஹேக்ட்ரான் ஏஐ என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த மோகன் பெதாபதி, ஹர்ஷ் ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் மைனி ஆகிய 3 இந்திய ஆராய்ச்சி வல்லுநர்கள், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கிளாட் ஏஐ மாடலைப் பயன்படுத்தி ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஸ்டத்தைக் கைப்பற்றி உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளனர். ஓபன்ஏஐ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக் பவுண்டி திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த சோதனையில், வெறும் 72 மணி நேரத்திற்குள் அவர்கள் அதன் சிஸ்டத்திற்குள் வெற்றிகரமாக ஊடுருவினர். கூடுதல் விபரங்கள் இங்கே:-

72 மணிநேரம்

வெறும் 72 மணி நேரத்திலும் $3,000 செலவிலும் நடத்தப்பட்ட சோதனை

இந்த சோதனையை செய்ய இவர்கள் வெறும் $3,000-க்கும் குறைவான (சுமார் ₹2.5 லட்சம்) ஏஐ டோக்கன்களை மட்டுமே செலவிட்டனர்.

ஓபன்ஏஐ நிறுவனத்தின் பொது சமூக மன்றத்தின் படத்தின் ஃபைல் செயலாக்க முறையில் இருந்த பிழையை கிளாட் ஏஐ உதவியுடன் கண்டறிந்து, அதை வெற்றிகரமாக இயக்கி சிஸ்டத்திற்குள் நுழைந்தனர்.

தொடர்ந்து, ஊழியர்களின் கணக்குகள் வழியாக நிறுவனத்தின் ரகசிய GitHub சேமிப்பகத்தையும் அடைந்து சாதித்தனர்.

அசாத்தியத் திறன்

3 இந்திய ஆராய்ச்சி வல்லுநர்களின் பின்னணி மற்றும் அசாத்தியத் திறன்

ஹேக்ட்ரான் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான வான மோகன் பெதாபதி ஆந்திராவின் RGUKT நுஸ்விட் கல்லூரியில் படித்தவராவார்.

ஹர்ஷ் ஜெய்ஸ்வால் ஆப்பிள், போன்பே போன்ற நிறுவனங்களில் பக் பவுண்டி செய்த 10 ஆண்டு அனுபவம் கொண்டவர்.

மற்றொரு ஆய்வாளரான ராகுல் மைனி டெல்லி பாரதி வித்யாபீத் கல்லூரியில் படித்து பல்வேறு ஹேக்கத்தான் விருதுகளை வென்றவர்.

பெரிய பிராண்ட் கல்லூரிகளில் படிக்காவிட்டாலும், இவர்களின் அசாத்தியத் திறமையை சர்வதேச சைபர் பாதுகாப்பு உலகம் வெகுவாகப் பாராட்டி வருகிறது.

ADVERTISEMENT

பரிசுத் தொகை

தவறை சரிசெய்து $6,500 பரிசுத்தொகை வழங்கிய ஓபன்ஏஐ

தான் கண்டறிந்த பாதுகாப்புக் குறைபாடுகளை இந்த இந்தியக் குழுவினர் நேர்மையாக ஓபன்ஏஐ நிறுவனத்திடம் சமர்ப்பித்தனர்.

உடனடியாக அந்தப் பிழையைச் சரிசெய்த ஓபன்ஏஐ நிர்வாகம், அவர்களின் சிறப்பான கண்டுபிடிப்பைப் பாராட்டி $6,500 (சுமார் ₹5.5 லட்சம்) தொகையைப் பரிசாக வழங்கி கௌரவித்தது.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மற்றொரு முன்னணி ஏஐ நிறுவனத்தின் சிஸ்டத்தைக் கைப்பற்ற முடியும் என்பதை இந்த இந்தியர்களின் சாதனை உலகிற்கு நிருபித்துள்ளது.

ADVERTISEMENT