ரயில் பயணிகளே உஷார்! மார்ச் முதல் 'UTS' செயலி வேலை செய்யாது
செய்தி முன்னோட்டம்
தெற்கு ரயில்வே மண்டலத்தில் புறநகர் ரயில் மற்றும் முன்பதிவில்லா பயணச்சீட்டுகளை (unreserved tickets) பெற பயன்பட்டு வந்த 'யூடிஎஸ்' (UTS) செயலி வரும் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கான சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் நோக்கில், 'ரயில் ஒன்' (Rail One) என்ற புதிய ஒருங்கிணைந்த செயலி அறிமுகப்படுத்தப்படுவதே இதற்கு காரணம். மார்ச் மாத தொடக்கத்திலிருந்து யூடிஎஸ் செயலியில் கீழ்க்கண்ட சேவைகள் முதல்கட்டமாக நிறுத்தப்படும்: புதிய பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் புதுப்பித்தல். புதிய பயனாளர் பதிவு (New User Registration). இதனை தொடர்ந்து, நடைமேடை பயணச்சீட்டு (Platform Ticket) முன்பதிவு மற்றும் ஆப்-வாலட்டில் (R-Wallet) பணம் சேர்த்தல் (Top-up) ஆகிய வசதிகளும் படிப்படியாக நிறுத்தப்படும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Switch to RailOne for your daily ticketing needs.
— Southern Railway (@GMSRailway) February 10, 2026
UTS on Mobile will be decommissioned from 01.03.2026.
Download RailOne and continue your journey without interruption.#RailOneApp #Tickets #SouthernRailway #IndianRailways pic.twitter.com/Siz5HpduyW
வாலட் பணம்
UTS வாலட் பணம் என்னவாகும்?
UTS செயலியில் வாலட்டில் பணம் வைத்திருந்த பயணிகள் கவலைப்பட தேவையில்லை; யூடிஎஸ் செயலியில் உள்ள ஆப்-வாலட் (R-Wallet) இருப்புத் தொகை முழுமையாக பாதுகாக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. அந்த தொகையை அப்படியே 'ரயில் ஒன்' செயலியில் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம். இனிமேல் ரயில் பயணிகள் தடையற்ற சேவையை பெற 'ரயில் ஒன்' (Rail One) செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதில் பயணச்சீட்டு முன்பதிவு முதல் ரயில்வேயின் இதர அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் பெற முடியும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.