Page Loader
$700 மில்லியன் சொத்துக்களை நன்கொடையாக வழங்கிய கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின்
$700 மில்லியன் சொத்துக்களை நன்கொடையாக வழங்கிய கூகுள் இணை நிறுவனர்

$700 மில்லியன் சொத்துக்களை நன்கொடையாக வழங்கிய கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின்

எழுதியவர் Sekar Chinnappan
May 26, 2025
02:14 pm

செய்தி முன்னோட்டம்

கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் செர்ஜி பிரின், கிட்டத்தட்ட $700 மில்லியன் மதிப்புள்ள ஆல்ஃபாபெட் இன்க் பங்குகளை மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இதை அவரது குடும்ப அலுவலகமான பேஷோர் குளோபலின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம், 3.2 மில்லியன் ஆல்ஃபாபெட் கிளாஸ் ஏ மற்றும் கிளாஸ் சி பங்குகளை உள்ளடக்கிய நன்கொடையின் மிகப்பெரிய பங்கு, 2021 இல் நிறுவப்பட்ட லாப நோக்கற்ற பிரின் நிறுவனமான கேட்டலிஸ்ட்4 க்கு சென்றுள்ளது. இந்த தொண்டு நிறுவனம் மத்திய நரம்பு மண்டல கோளாறுகள் குறித்த ஆராய்ச்சியை மேம்படுத்துவதிலும் காலநிலை மாற்ற தீர்வுகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறது.

அறக்கட்டளை

அறக்கட்டளைகளுக்கு வழங்கிய நிதி விபரங்கள்

முன்னதாக, இந்த வார தொடக்கத்தில் ஒழுங்குமுறை தாக்கல் ஆவணங்கள் மூலம், செர்ஜி பிரின் தோராயமாக 4.1 மில்லியன் ஆல்ஃபாபெட் பங்குகளை பரிசாக அளித்ததாகக் காட்டியது. ஆனால் அந்த நேரத்தில் இது யாருக்கு வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை வெளியிடவில்லை. இந்நிலையில், அந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கேட்டலிஸ்ட்4 ஐத் தவிர, பிரின் தனது குடும்ப அறக்கட்டளைக்கு 580,000 பங்குகளுக்கு மேல் ஒதுக்கினார். மேலும் 282,000 பங்குகள் மைக்கேல் ஜே. ஃபாக்ஸ் அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்டன. இது பார்கின்சன் நோய் ஆராய்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி $143 பில்லியன் நிகர மதிப்புடன் தற்போது உலகளவில் 10வது இடத்தில் உள்ள பிரின், தனது சொத்துக்களை அறிவியல் மற்றும் மனிதாபிமான முயற்சிகளுக்கு அதிகளவில் செலவிட்டு வருகிறார்.