LOADING...
சாம்சங் Galaxy S26 சீரிஸ் இன்று அறிமுகம்! நேரலையில் காண்பது எப்படி?
Galaxy S26 சீரிஸை இன்று உலகளவில் அறிமுகப்படுத்துகிறது Samsung

சாம்சங் Galaxy S26 சீரிஸ் இன்று அறிமுகம்! நேரலையில் காண்பது எப்படி?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 25, 2026
03:30 pm

செய்தி முன்னோட்டம்

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான Galaxy S26 சீரிஸை இன்று உலகளவில் அறிமுகப்படுத்துகிறது. 'Galaxy Unpacked 2026' என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்வு, இந்திய நேரப்படி இன்று இரவு 11:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிகழ்வில் Galaxy S26, Galaxy S26 Plus மற்றும் Galaxy S26 Ultra ஆகிய மூன்று மாடல்கள் அறிமுகமாகவுள்ளன. இதில் Galaxy S26 Ultra மாடலானது அதிநவீன Snapdragon 8 Elite Gen 5 பிராசஸருடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற இரண்டு மாடல்களான S26 மற்றும் S26 Plus ஆகியவை எக்ஸினோஸ் சிப்செட்டுடன் வெளிவர வாய்ப்புள்ளது. இவை அனைத்தும் சாம்சங்கின் One UI 8.5 இயங்குதளத்தில் செயல்படும்.

மற்றவை

AI மற்றும் கூடுதல் சாதனங்கள்

இந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. மொபைல் பயன்பாட்டில் AI-ன் பங்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பல புதிய அம்சங்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. ஸ்மார்ட்போன்கள் தவிர, Galaxy Buds 4 மற்றும் Galaxy Buds 4 Pro ஆகிய இயர்பட்களும் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

Advertisement