Loading...
'குழந்தைகள், முதியவர்கள் இனி பத்திரமா இருப்பாங்க!' ஜியோவின் புதிய ஜியோஷீல்ட்; முற்றிலும் இலவசமாக பெறுவது எப்படி?
ஜியோவின் புதிய ஜியோஷீல்ட் அறிமுகம்

'குழந்தைகள், முதியவர்கள் இனி பத்திரமா இருப்பாங்க!' ஜியோவின் புதிய ஜியோஷீல்ட்; முற்றிலும் இலவசமாக பெறுவது எப்படி?

எழுதியவர் Sekar Chinnappan
Sep 28, 2026
07:25 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளர்களின் குடும்ப பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஜியோஷீல்ட் என்ற புதிய சந்தா அடிப்படையிலான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள முதியவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதுடன், அவசர காலத்தில் உடனடியாகத் தொடர்புகொள்ளும் பாதுகாப்பு அம்சங்களையும் இச்சேவை தன்னுள் கொண்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

பாதுகாப்பு அம்சங்கள்

ஜியோஷீல்ட் செயலியின் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்

இந்த சேவையில் லைவ் லொகேஷன் டிராக்கிங் மூலம் குடும்பத்தினரின் இருப்பிடத்தை அறிய முடியும்.

ஆபத்தான சூழலில் அவர்கள் அனுப்பும் SOS அவசர எச்சரிக்கைகள், மொபைல் பேட்டரி குறையும் போது வரும் Low-battery Alert ஆகியவை பெற்றோரை எச்சரிக்கும்.

மேலும், குழந்தைகள் போனை பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்தும் Screen Time Control, அவர்கள் அணுகக்கூடிய ஆப்கள் மற்றும் தொடர்புகளைக் கட்டுப்படுத்தும் App & Contact Control வசதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஜியோஷீல்ட்

ஜியோஷீல்ட் இயங்கும் முறை மற்றும் சாதனத் தேவைகள்

ஜியோஷீல்ட் சேவை இரண்டு இணைக்கப்பட்ட செயலிகள் மூலம் இயங்குகிறது.

பெற்றோர்கள் ஜியோதிங்க்ஸ் செயலையையும், குழந்தைகள் அல்லது முதியவர்கள் ஜியோஷீல்ட் செயலையையும் தங்களது போனில் வைத்திருக்க வேண்டும்.

குழந்தைகளின் போனில் செயலில் உள்ள ஜியோ மொபைல் எண் இருப்பது கட்டாயமாகும்.

பெற்றோருக்கான ஜியோதிங்க்ஸ் ஆப் ஆண்ட்ராய்டில் கிடைக்கிறது, மேலும் ஐஓஎஸ் பதிப்பு அக்டோபர் 1, 2026 முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

ADVERTISEMENT

இலவச சலுகை

கட்டணம் மற்றும் 10-வது ஆண்டு சிறப்பு இலவச சலுகை

ஜியோஷீல்ட் சேவையின் ஆண்டு சந்தாக் கட்டணம் ₹1,000 ஆகும்.

ஆனால், ஜியோவின் 10-வது ஆண்டு விழா சலுகையாக செப்டம்பர் 26, 2026 முதல் தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு பதிவு செய்தவுடன் ₹1,000 மதிப்பிலான ரீசார்ஜ் வவுச்சர்கள் (10 x ₹100) வழங்கப்படுகின்றன.

அத்துடன் ₹4,000 மதிப்பிலான 12 மாத கேன்வா ப்ரோ சந்தாவும், 28 நாட்களுக்கு அன்லிமிடெட் 5ஜி அப்கிரேடும் இலவசமாகக் கிடைப்பதால் இச்சேவையை முற்றிலும் இலவசமாகவே பெற முடியும்.

ADVERTISEMENT