Loading...
பாதுகாப்பு விஷயத்தில் ஏஐ நிறுவனங்கள் அலட்சியம்! ஓபன்ஏஐ பாதுகாப்பு அதிகாரி டேவிட் ராபின்சன் ராஜினாமா
ஓபன்ஏஐ பாதுகாப்பு அதிகாரி டேவிட் ராபின்சன் ராஜினாமா

பாதுகாப்பு விஷயத்தில் ஏஐ நிறுவனங்கள் அலட்சியம்! ஓபன்ஏஐ பாதுகாப்பு அதிகாரி டேவிட் ராபின்சன் ராஜினாமா

எழுதியவர் Sekar Chinnappan
Oct 05, 2026
10:34 am

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ அமைப்பில் நீண்டகாலமாகப் பணியாற்றி வந்த மூத்த பாதுகாப்புத் துறைத் தலைவர் டேவிட் ராபின்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தின் தற்போதைய வளர்ச்சிப் பாதை ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது என்றும், சிலிகான் வேலி நிறுவனங்களின் கலாச்சாரம் சீரழிந்துவிட்டது என்றும் கூறி அவர் வெளியேறியுள்ளார். தி அட்லாண்டிக் இதழில் எழுதியுள்ள கட்டுரையில் ஏஐ நிறுவனங்கள் பாதுகாப்பு விஷயத்தில் காட்டும் அலட்சியம் குறித்து அவர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சோதனை

சோதனை மற்றும் தவறுகளின் மூலம் கற்றுக் கொள்ளும் முறைக்கு முடிவு

கடந்த 2023 முதல் ஓபன்ஏஐ நிறுவனத்தின் கொள்கை திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் தலைவராக டேவிட் ராபின்சன் பணியாற்றி வந்தார்.

"ஏஐ நிறுவனங்கள் சிக்கல்கள் உருவான பிறகே தங்களது பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துகின்றன.

இத்தகைய சோதனை மற்றும் தவறுகள் (Trial and Error) மூலம் கற்றுக் கொள்ளும் முறை இனி செல்லுபடியாகாது" என அவர் எச்சரித்துள்ளார்.

மனிதர்களை விட அதிக ஆற்றல் கொண்ட ஏஐ மாடல்கள் உருவாக்கப்படும் சூழலில், சிறிய தவறு கூட மீளமுடியாத பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் முதல் முயற்சியிலேயே பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றார்.

பாதுகாப்பு

அணுமின் நிலையங்கள் போன்ற கடுமையான பாதுகாப்பு அமைப்புகள் அவசியம்

ஏஐ நிறுவனங்களுக்கு ஆபத்தான தொழில்நுட்பங்களைக் கையாளும் முதிர்ச்சியும் அடக்கமும் இல்லை என்று ராபின்சன் சாடியுள்ளார்.

அணுமின் நிலையங்கள் மற்றும் பரபரப்பான விமான நிலையங்களில் பின்பற்றப்படுவதைப் போல பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகளுடன் ஏஐ மாடல்கள் நிர்வகிக்கப்பட வேண்டும்.

ஹக்கிங் ஃபேஸ் போன்ற சம்பவங்களின் போது ஏஐ ஏஜென்ட்கள் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட நிகழ்வுகளை சுட்டிக்காட்டிய அவர், வெளிப்படையான அழுத்தங்கள் மூலமே நிறுவனங்களை சரியான பாதைக்குக் கொண்டு வர முடியும் என்பதால் வெளியேறியதாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

விவாதம்

தீவிரமடையும் ஏஐ பாதுகாப்பு விவாதங்கள்

சமீபகாலமாக ஓபன்ஏஐ மற்றும் பிற முன்னணி ஏஐ ஆய்வுக்கூடங்களில் இருந்து பல மூத்த ஆராய்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றனர்.

ஏஐ தொழில்நுட்பம் மனிதகுலத்தின் அழிவிற்கு வழிவகுக்கும் என்ற அச்சம் அதிகரித்து வரும் வேளையில், டேவிட் ராபின்சனின் இந்த ராஜினாமா சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சாம் ஆல்ட்மேன் மற்றும் டாரியோ அமோடேய் போன்ற தலைவர்களும் இத்தகைய ஆபத்துகளை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ஏஐ விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் வலுத்து வருகிறது.

ADVERTISEMENT