Loading...
இந்தியாவிலேயே இனி ஏஐ தகவல்கள் சேமிக்கப்படும்! ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஜிபிடி-5.6 அறிமுகம்; முழு விவரங்கள்
இந்தியாவில் ஓபன்ஏஐ ஜிபிடி-5.6 டெர்ரா மற்றும் லூனா அறிமுகம்

இந்தியாவிலேயே இனி ஏஐ தகவல்கள் சேமிக்கப்படும்! ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஜிபிடி-5.6 அறிமுகம்; முழு விவரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 21, 2026
08:26 pm

செய்தி முன்னோட்டம்

முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான ஓபன்ஏஐ, தனது அதிநவீன ஜிபிடி-5.6 டெர்ரா மற்றும் ஜிபிடி-5.6 லூனா ஆகிய ஏஐ மாடல்களை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனத்துடன் இணைந்து, அமேசான் பெட்ராக் தளம் மூலம் இந்த ஏஐ மாடல்கள் இந்திய தொழில் நிறுவனங்களின் பயன்பாட்டிற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்கள் இங்கே:-

இந்தியா

இந்தியாவிலேயே தரவு செயலாக்கம் செய்யப்படும் பிரத்யேக வசதி

இந்த புதிய அறிமுகத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், ஏஐ மூலம் செயலாக்கப்படும் அனைத்துத் தகவல்களும் இந்தியாவிற்குள்ளேயே உள்ள அமேசான் சர்வர்களிலேயே தடையின்றி செயலாக்கப்படும்.

வங்கித் துறை, சுகாதாரத் துறை மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் போன்ற மிகவும் உணர்திறன் வாய்ந்த தகவல்களைக் கையாளும் இந்திய அமைப்புகளுக்கு, இந்த உள்ளூர் தரவுச் செயலாக்க வசதி மிகப்பெரிய பாதுகாப்பையும் நம்பிக்கையையும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

டெர்ரா மற்றும் லூனா மாடல்களின் சிறப்பம்சங்கள் என்ன?

இந்த இரு ஏஐ மாடல்களும் வெவ்வேறு வகையான தொழில்சார் தேவைகளுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஜிபிடி-5.6 டெர்ரா மாடலானது மென்பொருள் உருவாக்கம், தரவுப் பகுப்பாய்வு மற்றும் ஆவண மேலாண்மை போன்ற அன்றாட அலுவலகப் பணிகளுக்கு ஏற்ற சமநிலையான தேர்வாகும்.

அதேவேளையில், ஜிபிடி-5.6 லூனா மாடலானது அதிவேகமாகவும், மிகக் குறைந்த செலவிலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளைக் கையாளும் நிறுவனங்களுக்குப் பெரிதும் உதவும்.

ADVERTISEMENT

குறைந்த செலவு

80% வரை குறைந்த செலவில் கிடைக்கும் ஏஐ சேவைகள்

இந்தியாவில் அமேசான் பெட்ராக் மூலம் கிடைக்கும் இந்த ஏஐ மாடல்களுக்கு ஓபன்ஏஐ நிறுவனம் கட்டணக் குறைப்புகளை அறிவித்துள்ளது.

இதன்படி, ஜிபிடி-5.6 லூனா மாடலுக்கு 80 சதவீதம் வரையிலும், ஜிபிடி-5.6 டெர்ரா மாடலுக்கு 20 சதவீதம் வரையிலும் கட்டணக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரே ஏபிஐ கட்டமைப்பின் கீழ், இந்திய நிறுவனங்கள் தங்களின் தேவைக்கேற்ப வெவ்வேறு ஏஐ மாடல்களை மிகக் குறைந்த செலவில் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ADVERTISEMENT

மாற்றங்கள்

இந்தியத் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் மாபெரும் மாற்றங்கள்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர் சரிபார்ப்பு, ஆவண செயலாக்கம் மற்றும் சட்டப்பூர்வ அறிக்கைகளை உருவாக்க இந்த ஏஐ மாடல்களைப் பயன்படுத்தலாம்.

மேலும், மென்பொருள் எழுதுதல், அறிக்கைகள் தயாரித்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவை சாட்பாட்களை உருவாக்குதல் போன்ற பணிகளை இந்திய நிறுவனங்கள் இனி மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் செய்து முடிக்க முடியும்.

இந்த நடவடிக்கை இந்திய நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை முழு வீச்சில் பயன்படுத்த வழிவகுக்கும்.

ADVERTISEMENT