NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / மூளை இம்பிளான்ட் ஆய்வு: 3 நோயாளிகளை நாடுகிறது எலான் மஸ்க்கின் நியூராலிங்க்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மூளை இம்பிளான்ட் ஆய்வு: 3 நோயாளிகளை நாடுகிறது எலான் மஸ்க்கின் நியூராலிங்க்

    மூளை இம்பிளான்ட் ஆய்வு: 3 நோயாளிகளை நாடுகிறது எலான் மஸ்க்கின் நியூராலிங்க்

    எழுதியவர் Sindhuja SM
    May 29, 2024
    07:31 pm

    செய்தி முன்னோட்டம்

    எலான் மஸ்க் நிறுவிய மூளை-சிப் உருவாக்கும் நிறுவனமான நியூராலிங்க், அதன் புரட்சிகரமான சாதனத்தை மதிப்பிடுவதற்காக மூன்று நோயாளிகளை நீண்ட கால ஆய்வில் சேர்க்க திட்டமிட்டுள்ளது.

    அமெரிக்க அரசாங்கத்தின் மருத்துவ பரிசோதனை தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த ஆராய்ச்சி முடிவடைய பல ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.

    ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, ஆரம்பத்தில், மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்க அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களிடம் நியூராலிங்க் விண்ணப்பித்தபோது, ​அந்த நிறுவனம் 10 நோயாளிகளைச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

    நியூராலிங் மூளை-கணினி இடைமுகம்(BCI) என்ற சிப்பை உருவாகியுள்ளது.

    இந்த சிப் முடங்கிய நோயாளிகளின் மூளையில் பொருத்தப்பட்டால், எண்ணங்களை மட்டும் வைத்து அவர்களால் டிஜிட்டல் சாதனங்களை இயக்க முடியும்.

    நியூராலிங்க்

    ரோபோவை வைத்து அறுவை சிகிச்சை 

    கடந்த ஆண்டு மனித சோதனைகளைத் தொடங்க அரசாங்கத்திடம் ஒப்புதல் பெறுவதற்கு முன்பு இருந்தே, இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக முடங்கிய நோயாளிகளிடமிருந்து ஆர்வத்தைப் பெற்று வருகிறது.

    ரோபோவை பயன்படுத்தி அந்த சிப்பை ஒரு நோயாளியின் மூளைக்குள் வைப்பதில் இருந்து இந்த ஆய்வுக்கான செயல்முறை தொடங்குகிறது.

    இந்த ஆய்வு 2031 இல் முடிவடையும் என்றும் 22 முதல் 75 வயதுடைய நோயாளிகள் இதில் பங்கு பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வுக்குத் தகுதி பெற, நோயாளிகள் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு முடக்கமாக இருந்திருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் அவர்களுக்கு 12 மாதங்கள் ஆயுட்காலம் இருக்க வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலான் மஸ்க்
    மருத்துவம்

    சமீபத்திய

    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக

    எலான் மஸ்க்

    பாலஸ்தீன உதவி குழுக்களுக்கு இணைய வசதியை வழங்க முன்வந்தது 'ஸ்டார்லிங்க்': எலான் மஸ்க் அறிவிப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'Grok' என்ற புதிய AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தும் எலான் மஸ்க்கின் xAI எக்ஸ்
    ராக்கெட் மறுபயன்பாட்டில் புதிய சாதனை படைத்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி
    பயனாளர் பெயர்களை விற்பனை செய்யும் புதிய திட்டத்தை அமல்படுத்தும் எக்ஸ்? எக்ஸ்

    மருத்துவம்

    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது இந்தியா
    மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலமாக மலேரியாவை ஒழிக்க முடியும்! மலேரியா
    தேசிய மருத்துவர் தினம் 2023: வரலாறும் முக்கியத்துவமும் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025