Loading...
ஏஐ மாடலை மிகக் குறைவாக நம்புவதே பாதுகாப்பானது; மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா அதிரடி
மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா

ஏஐ மாடலை மிகக் குறைவாக நம்புவதே பாதுகாப்பானது; மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா அதிரடி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 11, 2026
07:23 pm

செய்தி முன்னோட்டம்

மிகவும் நம்பகமான சூப்பர் இண்டலிஜென்ஸ் அமைப்பு என்பது, பயனர்கள் அந்த மாடலை எந்த அளவிற்கு அதிகமாக நம்புகிறார்கள் என்பதில் இல்லை. மாறாக, பயனர்கள் அந்த மாடலை மிகக் குறைவாக நம்பும் வகையிலான பாதுகாப்பை வழங்கும் அமைப்பே சிறந்ததாகும் என மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார். எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் அவர் இந்த முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

வேறுபாடு

பாரம்பரிய மென்பொருள் மற்றும் புதிய ஏஐ மாடல்களின் வேறுபாடு

முந்தைய பாரம்பரிய மென்பொருள் அமைப்புகளில் ஒரு குறிப்பிட்ட குறியீடு (Code) எவ்வாறு இயங்குகிறது என்பதை பொறியாளர்களால் நேரடியாகக் கண்டறிந்து கண்காணிக்க முடிந்தது என சத்ய நாதெல்லா சுட்டிக்காட்டினார்.

ஆனால், இன்றைய அதிநவீன ஏஐ மாடல்களில் இந்த வெளிப்படைத்தன்மை சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டார்.

பயிற்சி தரவுகள் மற்றும் மாடலின் எடைகள் (Model Weights) எவ்வாறு ஒரு குறிப்பிட்ட வெளியீட்டை உருவாக்குகின்றன என்பதைக் துல்லியமாகக் கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது என அவர் கவலை தெரிவித்தார்.

கட்டுப்பாடுகள்

வெளிப்புறப் பாதுகாப்பு மற்றும் மனிதக் கட்டுப்பாடுகளின் தேவை

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது மிக முக்கியத் தரவுகளை ஏஐ ஏஜெண்டுகளிடம் ஒப்படைக்கும் போது, வெறும் டெவலப்பர்களின் வாக்குறுதிகளை மட்டும் நம்பி செயல்பட முடியாது என அவர் எச்சரித்தார்.

எனவே, இந்தத் தீர்மானிக்க முடியாத ஏஐ மாடல்களை சுற்றி வலுவான அமைப்புக் கட்டுப்பாடு, மனித மேற்பார்வை மற்றும் நம்பகமான செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என்றார்.

கட்டுப்பாட்டு வழிமுறைகள் அனைத்தும் ஏஐ மாடலுக்கு வெளியே சுயாதீனமாக இயங்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ADVERTISEMENT

தணிக்கை

பாதுகாப்பு விதிகள் மற்றும் சுயாதீனத் தணிக்கை முறைகள்

திறந்த மற்றும் மூடிய வடிவிலான ஏஐ மாடல்களை ஒருவித உட்புற அச்சுறுத்தலாகக் (Insider Threat) கருதி அணுக வேண்டும் என நாதெல்லா பரிந்துரைத்தார்.

1970-களில் பயன்படுத்தப்பட்ட தகவல் பாதுகாப்பு விதிகளின்படி, ஒரு புரோகிராம் தனது அனுமதிகளைத் தானே மாற்றிக் கொள்ள அனுமதிக்கக் கூடாது எனக் கூறினார்.

எனவே, மாடல்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிக்கத் தணிக்கைகள், கட்டுப்பாட்டு நிறுத்தல்கள் (Containment shutoffs) மற்றும் தொழில்முறைப் பாதுகாப்புத் தரநிலைகளை உலகளவில் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ADVERTISEMENT