LOADING...
இன்று மாலை வானில் ஓர் அபூர்வக் காட்சி: சந்திரன் - பிளேயடிஸ் நட்சத்திரக் கூட்டம் சந்திப்பு!
இன்று மாலை சந்திரன் - பிளேயடிஸ் நட்சத்திரக் கூட்டம் சந்திப்பு!

இன்று மாலை வானில் ஓர் அபூர்வக் காட்சி: சந்திரன் - பிளேயடிஸ் நட்சத்திரக் கூட்டம் சந்திப்பு!

எழுதியவர் Venkatalakshmi V
Feb 23, 2026
05:59 pm

செய்தி முன்னோட்டம்

இன்று, பிப்ரவரி-23 மாலை வானார்வலர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஒரு அழகான வானியல் நிகழ்வு நிகழவுள்ளது. இன்று மாலை சூரிய மறைவிற்கு பிறகு, நிலவானது புகழ்பெற்ற 'Pleiades' நட்சத்திரக் கூட்டத்திற்கு மிக அருகில் காட்சியளிக்கவுள்ளது. சந்திரன் தனது வழக்கமான 27-நாள் சுழற்சி பாதையில் பயணிக்கும்போது, அவ்வப்போது பிரகாசமான நட்சத்திரக்கூட்டங்களை கடந்து செல்லும். அந்த வகையில், இன்று மாலை ரிஷப ராசி மண்டலத்தில் அமைந்துள்ள இந்த இளம் நட்சத்திரக் கூட்டத்தை நிலவு நெருங்குகிறது. பூமியிலிருந்து சுமார் 3,84,400 கி.மீ தொலைவில் நிலவு உள்ள நிலையில், பிளேயடிஸ் சுமார் 444 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இவை இரண்டும் விண்வெளியில் உண்மையில் அருகருகே இல்லையென்றாலும், பூமியிலிருந்து பார்க்கும்போது மிக நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும்.

விவரங்கள்

இந்நிகழ்வை காண்பது எப்படி?

இந்திய நேரப்படி இன்று மாலை அந்தி சாய்ந்த பிறகு, மேற்கு திசை வானில் இந்த இணைப்பை காணலாம். வெறும் கண்ணால் பார்க்கும்போது நிலவிற்கு அருகில் ஒரு சிறிய ஒளிரும் நட்சத்திரக் குவியலாக இது தெரியும். சாதாரண தொலைநோக்கி (Binoculars) மூலம் பார்க்கும்போது, நீல-வெள்ளை நிறத்தில் மின்னும் டஜன் கணக்கான நட்சத்திரங்களின் தெளிவான காட்சியை கண்டு ரசிக்க முடியும். இந்த நிகழ்வு இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் தெரியவரும். இது ஒரு அபூர்வ நிகழ்வு இல்லையென்றாலும், இரவு வானின் அழகை ரசிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

Advertisement