Loading...
மனித உதவியே தேவையில்லை! தானாகவே லேசர் சோதனையை செய்து அசத்திய எம்ஐடி ரோபோட்
மனிதர்களின் உதவி இல்லாமல் பரிசோதனை செய்து வெற்றி பெற்ற எம்ஐடி ரோபோட்

மனித உதவியே தேவையில்லை! தானாகவே லேசர் சோதனையை செய்து அசத்திய எம்ஐடி ரோபோட்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 21, 2026
07:51 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ்பெற்ற மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (எம்ஐடி) விஞ்ஞானிகள், மனிதர்களின் உதவி இல்லாமல் தானாகவே ஆப்டிக்ஸ் பரிசோதனைகளை மேற்கொள்ளும் ரோபோடிக் ஆய்வகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த அதிநவீன ரோபோடிக் சிஸ்டம், ஆப்டிகல் கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்களைத் துல்லியமாக எடுத்து வைத்து, சோதனைகளை நடத்தி முடிக்கிறது. மேலும் சோதனைகளின் போது ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால், அதைத் தானாகவே கண்டறிந்து சரிசெய்யும் திறனையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

லேசர் சிஸ்டம்

வெறும் 30 நிமிடங்களில் 50 நகர்வுகளுடன் இயங்கிய லேசர் சிஸ்டம்

இந்த ரோபோடிக் அமைப்பின் திறனை சோதிக்க, எம்ஐடி ஆய்வாளர்கள் ஒரு சிக்கலான லேசர் காவிட்டி அமைப்பை உருவாக்க உத்தரவிட்டனர்.

அந்த ரோபோட் வெறும் 30 நிமிடங்களில் சுமார் 50 தனித்துவமான நகர்வுகளை மேற்கொண்டு, பாகங்களைச் சரியாகப் பொருத்தி ஒரு லேசரை வெற்றிகரமாக உருவாக்கியது.

அதன் பிறகு, ஆய்வாளர்கள் வேண்டுமென்றே அந்த லேசர் அமைப்பைக் கலைத்து இடையூறு செய்தனர்.

ஆனால், அந்த ரோபோட் உடனடியாக அந்த பிழையைக் கண்டறிந்து, மீண்டும் லேசரை பழைய நிலைக்கு சீரமைத்தது.

ஆய்வகம்

ரோபோடிக் ஆய்வகம் எவ்வாறு இயங்குகிறது?

இந்த அமைப்பில் 7 இணைப்புகளைக் கொண்ட மிகவும் துல்லியமான ரோபோடிக் கை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் உள்ள ஆப்டிகல் பாகங்கள் அனைத்தும் 3D பிரிண்டிங் மூலம் தயாரிக்கப்பட்ட ஹோல்டர்களில் வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஹோல்டரிலும் ஒரு QR கோட் உள்ளது. அதைப் படித்துப் பார்த்துத் தேவையான பாகங்களை ரோபோட் அடையாளம் கண்டுகொள்கிறது.

பின்னர் வயர்லெஸ் முறையில் இயங்கும் கருவியைப் பயன்படுத்தி, மைக்ரான் அளவில் மிகத் துல்லியமாக பாகங்களை நகர்த்தி சோதனைகளை செய்து முடிக்கிறது.

ADVERTISEMENT

அறிவியல்

24 மணி நேரமும் இயங்கும் எதிர்கால அறிவியல் ஆய்வகங்கள்

பொதுவாக ஆப்டிகல் பரிசோதனைகளை மனிதர்கள் கையால் செய்யும்போது பல நாட்கள் அல்லது மாதங்கள் வரை ஆகலாம்.

ஆனால், இந்த ரோபோடிக் முறையின் மூலம் ஒரு பரிசோதனை முடிந்ததும், பாகங்களைப் பிரித்து எடுத்துப் புதிய சோதனையை உடனடியாகத் தொடங்க முடியும்.

விஞ்ஞானிகள் தூரத்திலிருந்தே கட்டளைகளை அனுப்ப, ரோபோட்டுகள் 24 மணி நேரமும் ஆய்வகங்களில் சோதனைகளை நடத்தும் எதிர்காலம் இதனால் சாத்தியமாகியுள்ளது.

இது சோலார் செல்கள், குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் கார்பன் பிடிப்பு ஆய்வுகளுக்குப் பெரிதும் உதவும்.

ADVERTISEMENT