Loading...
மனிதக் கையை தாமாகவே இயக்கும் ஏஐ! எம்ஐடி விஞ்ஞானிகளின் அதிரடி கண்டுபிடிப்பு; மனித அறிவாற்றலில் புதிய புரட்சி
மனிதக் கையை இயக்கும் புதிய கூகுள் ஏஐ சாதனத்தை உருவாக்கியது எம்ஐடி பல்கலைக்கழகம்

மனிதக் கையை தாமாகவே இயக்கும் ஏஐ! எம்ஐடி விஞ்ஞானிகளின் அதிரடி கண்டுபிடிப்பு; மனித அறிவாற்றலில் புதிய புரட்சி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 21, 2026
04:56 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்ஐடி பல்கலைக்கழக மீடியா லேப்பில் நடைபெற்ற எம்ஐடி ஹார்ட் மோட் 2026 ஹேக்கத்தானில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் மின்சார தசை தூண்டுதல் (EMS) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதர்களின் கைகளைத் தாமாகவே இயக்கும் புதிய ஹியூமன் ஆபரேட்டர் என்ற அணியக்கூடிய சாதனத்தை எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஆறு பேரடங்கிய இளம் விஞ்ஞானிகள் குழு இணைந்து உருவாக்கிய இந்த சாதனம் ஹேக்கத்தானின் முதன்மை விருதை வென்றுள்ளது.

ஹியூமன் ஆபரேட்டர்

ஹியூமன் ஆபரேட்டர் சாதனம் எப்படி செயல்படுகிறது?

இந்த புதிய ஏஐ சாதனம் தலையில் பொருத்தப்படும் கேமரா, குரல் கட்டளைகள், ஏஐ தொழில்நுட்பம் மற்றும் மின்சார தசை தூண்டுதல் வன்பொருள்களைக் கொண்டு இயங்குகிறது.

பயனரின் குரல் கட்டளைகளையும் சுற்றியுள்ள சூழலையும் கேமரா பதிவு செய்து, ஆந்த்ரோபிக் கிளாட் ஏஐ மாதிரிக்கு அனுப்புகிறது.

ஏஐ அளிக்கும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில், அர்டுயினோ கட்டுப்பாட்டு அமைப்பு தசை நார்களைக் லேசான மின்சாரத் துடிப்புகள் மூலம் தூண்டி, கை மற்றும் மணிக்கட்டு விரல்களை அசைக்க செய்கிறது.

சோதனை

மருத்துவ ஆராய்ச்சிக்கான சோதனை வடிவம்

இந்த ஹியூமன் ஆபரேட்டர் சாதனம் வணிக ரீதியான நுகர்வோர் பயன்பாட்டிற்காக உருவாக்கப்படவில்லை என்றும், இது மனித-கணினி தொடர்பு மற்றும் உடலியல் சார்ந்த ஏஐ ஆராய்ச்சிக்கான ஒரு தொடக்கப் புள்ளி என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

வழக்கமான ஏஐ செயலிகளைப் போல உரைகள் அல்லது படங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, நேரடியாக மனித உடலின் இயற்பியல் இயக்கத்தில் ஏஐ ஆதிக்கம் செலுத்துவது இதுவே முதன்முறையாகும்.

ADVERTISEMENT

பாதுகாப்பு

பாதுகாப்பு அம்சங்களும் எதிர்கால சவால்களும்

மனித உடலை நேரடியாகத் தூண்டி இயக்கும் அமைப்பு என்பதால், இதில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் அவசியமாகின்றன.

தசைப்பிடிப்பு அல்லது தவறான இயக்கங்களைத் தடுக்கத் துல்லியமான அளவுத்திருத்தம், அவசரக்கால நிறுத்த பொத்தான்கள் மற்றும் தசை மின் வரைபடம் (EMG) சென்சார்கள் போன்ற தொழில்நுட்பப் பாதுகாப்பு வழிமுறைகளை சேர்ப்பது மிகவும் அவசியமாகும்.

இத்தொழில்நுட்பம் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளதால், தொடர் சோதனைகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகே முழு வடிவம் பெறும்.

ADVERTISEMENT

தொழில்நுட்பம்

மாற்றுத்திறனாளிகளுக்குப் புத்துயிர் அளிக்கும் உதவித் தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு டிஜிட்டல் திரைகளைத் தாண்டி நிஜ உலகில் மனித உடலோடு இணைந்து செயல்பட முடியும் என்பதை இந்த ஹியூமன் ஆபரேட்டர் சாதனம் நிரூபித்துள்ளது.

எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நரம்பியல் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் உடல் இயக்க மறுவாழ்வு தேவைப்படுபவர்களுக்கு மிகப்பெரிய உதவித் தொழில்நுட்பமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT