Loading...
சிகப்பு நிறத்தில் ஒளிரும் நிலவு! ஆகஸ்ட் 28 பகுதி சந்திர கிரகணம்; இந்தியாவில் தெரியுமா?
ஆகஸ்ட் 28 பகுதி சந்திர கிரகணம்

சிகப்பு நிறத்தில் ஒளிரும் நிலவு! ஆகஸ்ட் 28 பகுதி சந்திர கிரகணம்; இந்தியாவில் தெரியுமா?

எழுதியவர் Sekar Chinnappan
Aug 26, 2026
05:54 pm

செய்தி முன்னோட்டம்

விண்வெளி மற்றும் வானியல் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பாத்து காத்துக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்வாகப் பகுதி சந்திர கிரகணம் அமையவுள்ளது. இந்த நிகழ்வின் போது, நிலவின் மேற்பரப்பில் சுமார் 96 சதவீதப் பகுதியை பூமியின் கருநிழல் முழுமையாக மறைக்கும். இதன் காரணமாக, நிலவின் பெரும்பகுதி மங்கலான சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கும் ரத்த நிலவு தோற்றத்தை அடையும்.

இந்திய நேரம்

இந்திய நேரம் மற்றும் முக்கியக் கட்டங்கள்

இந்தச் சந்திர கிரகணத்தின் வெவ்வேறு கட்டங்கள் இந்திய நேரப்படி பின்வருமாறு நிகழும்:

புறநிழல் நிலவு மறைப்பு தொடக்கம் (Penumbral Begins): காலை 06:53 AM

பகுதி சந்திர கிரகணம் தொடக்கம் (Partial Begins): காலை 08:03 AM

உச்சக்கட்ட கிரகணம் (Maximum Eclipse): காலை 09:42 AM

பகுதி சந்திர கிரகணம் முடிவு (Partial Ends): காலை 11:21 AM

புறநிழல் நிலவு மறைப்பு முடிவு (Penumbral Ends): பிற்பகல் 12:31 PM

இந்தியா

இந்தியாவில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியுமா?

இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு இந்த சந்திர கிரகணம் நேரடியாகப் புலப்படாது.

ஏனெனில், இந்திய நேரப்படி கிரகணம் தொடங்கும் காலை 06:53 மணிக்கு நிலவு அடிவானத்திற்குக் கீழே சென்றுவிடும் என்பதால், பகல் நேரத்தில் இதை வெறும் கண்ணால் பார்க்க முடியாது.

வட மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த கிரகணத் தோற்றத்தை இரவு அல்லது அதிகாலை வேளையில் தெளிவாகக் காண முடியும்.

ADVERTISEMENT

சிவப்பு நிறம்

நிலவு ஏன் சிவப்பு நிறமாக (Blood Moon) மாறுகிறது?

சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து செல்லும் போது, அதில் உள்ள குறைந்த அலைநீளம் கொண்ட நீல நிற ஒளிகள் சிதறடிக்கப்படுகின்றன.

ஆனால், அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிற ஒளிகள் மட்டும் பூமியின் வளிமண்டலத்தால் வளைக்கப்பட்டு (Refraction) நிலவின் மீது விழுகின்றன.

இதனால் தான் நிழலில் மறைக்கப்படும் நிலவு முற்றிலும் இருளடையாமல், செம்பு நிறத்திலோ அல்லது அடர் சிவப்பு நிறத்திலோ ஒளிர்கிறது.

மேலும் இந்த கிரகண இரவில் நிலவுக்கு அருகே சனி கிரகம் பிரகாசமாகக் காட்சியளிப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

ADVERTISEMENT