
முதல் VR ஹெட்செட்டை இந்தியாவில் வெளியிட்டது ஜியோ! என்ன ஸ்பெஷல்?
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல்லின் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிறகு அதனை முன்னிட்டு தங்களுடைய பல சேவைகளை பயனர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது ஜியோ.
அதன் ஒரு பகுதியாக தற்போது தங்களுடய முதல் VR ஹெட்செட்டான ஜியோடைவை (JioDive) இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஜியோ நிறுவனம்.
இந்த VR ஹெட்செட்டைப் பயன்படுத்தி ஐபிஎல் போட்டிகளை ஸ்டேடியத்தில் அமர்ந்து பார்க்கும் உணர்வை பெற முடியும் என விளம்பரம் செய்து வருகிறது ஜியோ.
ரூ.1,299 விலையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஹெட்செட்டைப் பயன்படுத்துவதன் மூலம், 100 இன்ச் திரையில் ஐபிஎல் பார்க்கும் அனுபவத்தைப் பெற முடியும் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
பேடிஎம் வாலட்டைப் பயன்படுத்தி இந்த VR ஹெட்செட்டை வாங்கினால், ரூ.500 வரை கேஷ்பேக் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ
என்னென்ன வசதிகள்.. எப்படிப் பயன்படுத்துவது?
இந்தப் புதிய சாதனத்தை ஜியோ வாடிக்கையாளர்களுக்காவே பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
ஆண்ட்ராய்டு 9 அல்லது அதற்கும் மேற்பட்ட வெர்ஷன் மற்றும் ஐஓஎஸ் 15 அல்லது அதற்கும் மேற்பட்ட வெர்ஷன் கொண்ட 4.7 முதல் 6.7 இன்ச் வரை திரை அளவு கொண்ட ஸ்மார்ட்போன்களில் இந்த VR ஹெட்செட்டைப் பயன்படுத்தலாம்.
ஹெட்செட்டின் பாக்ஸில் கொடுக்கப்பட்டிருக்கும் QR கோடைப் பயன்படுத்தி ஜியோஇம்மர்ஸ் செயலியை பதிவிறக்கம் செய்து ஜியோடைவ் சாதனத்தைப் பயன்படுத்த முடியும்.
மேலும், இந்த VR ஹெட்செட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் வாடிக்கையாளர்கள் ஜியோ நெட்வொர்க்குடன் இணைந்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
ஜியோவின் அதிகாரப்பூர்வ தளத்திலோ அல்லது ஜியோ மார்டிலோ இந்த VR ஹெட்செட்டை பயனர்கள் வாங்கிக் கொள்ள முடியும்.