Loading...
சூரியனின் வெப்பநிலை ரகசியம் உடைந்தது! இந்திய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு: உலக அரங்கில் இஸ்ரோ சாதனை
ஆதித்யா-எல்1 விண்கலத்தின் புதிய கண்டுபிடிப்பு

சூரியனின் வெப்பநிலை ரகசியம் உடைந்தது! இந்திய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு: உலக அரங்கில் இஸ்ரோ சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 14, 2026
04:47 pm

செய்தி முன்னோட்டம்

சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 5,500 டிகிரி செல்சியஸாக உள்ள நிலையில், அதன் வெளிவட்ட அடுக்கான கொரோனா பகுதி பல மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருப்பது இயற்பியல் விதிகளுக்கு சவாலாகவே இருந்து வருகிறது. வழக்கமான இயற்பியல் விதிகளின்படி சூரியனின் மையப்பகுதியில் இருந்து தொலைவில் செல்லச் செல்ல வெப்பநிலை குறைய வேண்டும். ஆனால் கொரோனா பகுதியில் மட்டும் வெப்பநிலை பல மடங்கு அதிகரித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நீண்டகாலப் புதிருக்கு இஸ்ரோவின் முதன்மை சூரிய ஆராய்ச்சி விண்கலமான ஆதித்யா-எல்1 புதிய விடைகளைக் கண்டறிந்து சாதனை படைத்துள்ளது.

ஆற்றல்

காந்தப் புலன்களின் இணைப்பு மற்றும் ஆற்றல் மறுசீரமைப்பு

இந்திய இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அஸ்ட்ரோஃபிசிக்ஸ் மையத்தை சேர்ந்த பேராசிரியர் ஆர்.ரமேஷ் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில், சூரியனின் கொரோனா பகுதி தொடர்ந்து அதிக வெப்பத்துடன் இருப்பதற்கான முதன்மை காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

சூரியனின் வளிமண்டலத்தில் உள்ள சிக்கலான காந்தப் புல கோடுகள் அறுபட்டு, பின்னர் மீண்டும் ஒன்றுடன் ஒன்று இணைவதுதான் இதற்குக் காரணம் ஆகும்.

இந்த செயலிழப்பு மற்றும் இணைப்பு நிகழ்வின் போது வெளியாகும் பிரம்மாண்ட ஆற்றல், கொரோனா பகுதிக்குத் தேவையான வெப்பத்தை நொடிகளில் மீளமைத்து அதை எப்போதும் அதிக வெப்பத்துடன் வைத்திருக்க உதவுகிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்தப் புலம்

சூரிய அலைகள் மற்றும் காந்தப் புலத்தின் பங்களிப்பு

சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் கொதிநிலை இயக்கங்கள் மூலம் உருவாகும் அலைகள், கொரோனாவிற்குத் தேவையான ஆற்றலில் வெறும் 7 சதவீதத்தை மட்டுமே வழங்குகின்றன என்று இந்த ஆய்வில் துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள 93 சதவீத பிரம்மாண்டமான ஆற்றல், சூரியனின் காந்தப் புலக் கோடுகள் அறுபட்டு மீண்டும் இணைவதாலேயே கிடைக்கிறது.

2024 ஆகஸ்ட் 5 அன்று சூரியனில் நிகழ்ந்த மிக சக்திவாய்ந்த ஆற்றல் வெளியீட்டை ஆதித்யா-எல்1 விண்கலத்தில் உள்ள வெல்க் (VELC) கருவி மூலம் ஆய்வு செய்த பின்னரே இந்த முக்கிய முடிவை இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

பூமி

விண்வெளி ஆராய்ச்சி மற்றும் புவிப் பாதுகாப்பு

சூரியனில் இருந்து வெளிப்படும் இந்த ஆற்றல் உமிழ்வுகள் பூமியின் செயற்கைக்கோள்கள், மின் விநியோகக் கட்டமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களைப் பாதிக்கும் திறன் கொண்டவை ஆகும்.

இந்த உமிழ்வுகள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் ஆற்றலை எவ்வாறு மறுசீரமைப்பு செய்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது, எதிர்கால விண்வெளி வானிலை கணிப்புகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

ஆதித்யா-எல்1 விண்கலம் வழங்கிய இந்தத் தரவுகள், சர்வதேச அளவில் சூரியனைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவியலாளர்களுக்கு ஒரு புதிய வழிகாட்டியாகவும், இயற்பியலின் அடிப்படை சந்தேகங்களைத் தீர்க்கும் முக்கிய சான்றாகவும் அமைந்து சாதனை படைத்துள்ளது.

ADVERTISEMENT