LOADING...
தட்கல் முடிந்தாலும் கவலை வேண்டாம்! ரயில்வே சார்ட் போட்ட பிறகு டிக்கெட் எடுப்பது எப்படி? யாரும் சொல்லாத IRCTC சீக்ரெட் ஹேக்
தட்கல் டிக்கெட் கிடைக்காவிட்டாலும் கடைசி நேரத்தில் கன்பார்ம் சீட் பெறும் சீக்ரெட் வழி

தட்கல் முடிந்தாலும் கவலை வேண்டாம்! ரயில்வே சார்ட் போட்ட பிறகு டிக்கெட் எடுப்பது எப்படி? யாரும் சொல்லாத IRCTC சீக்ரெட் ஹேக்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 20, 2026
01:33 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட் எடுப்பது என்பது குதிரைக் கொம்பாக மாறிவிட்டது. தத்கல் டிக்கெட்டுகள் சில வினாடிகளிலேயே விற்றுத் தீர்ந்துவிடும் நிலையில், பலரும் பயணத்தை ரத்து செய்யும் சூழல் ஏற்படுகிறது. ஆனால், தத்கல் இல்லாமலேயே கடைசி நிமிடத்தில் காலியாக உள்ள இருக்கைகளைக் கண்டறிந்து முன்பதிவு செய்ய ஒரு சட்டப்பூர்வமான வழி உள்ளது. அதுதான் ஐஆர்சிடிசியின் Charts/Vacancy வசதி.

சார்ட்

சார்ட் தயாரித்த பிறகு சீட் பிடிப்பது எப்படி?

பொதுவாக ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாக இறுதி சார்ட் (Final Chart) தயாரிக்கப்படும். அதன் பிறகு எந்தெந்த இருக்கைகள் காலியாக உள்ளன என்பதை நீங்களே நேரலையில் பார்க்கலாம்: ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியில் லாகின் செய்த பிறகு முகப்புப் பக்கத்தில் உள்ள 'Charts/Vacancy' என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும். ரயில் எண், தேதியைக் குறிப்பிட்டு, நீங்கள் ஏற வேண்டிய நிலையத்தைத் தேர்வு செய்யவும். இப்போது ரயிலின் பெட்டிகள் வாரியாக எந்தெந்த இருக்கைகள் காலியாக உள்ளன என்ற வரைபடம் தோன்றும். இதில் பச்சை நிறத்தில் இருக்கும் இருக்கைகள் காலியாக இருப்பவை. இவற்றை நீங்கள் உடனடியாக ஆன்லைனில் புக் செய்யலாம் அல்லது ரயிலில் இருக்கும் டிடிஇயிடம் காட்டி அந்த இருக்கையை ஒதுக்கச் சொல்லலாம்.

தட்கல்

இது ஏன் தட்கலை விடச் சிறந்தது?

தட்கல் என்பது ஒரு நாளைக்கு முன்னரே முடிந்துவிடும். ஆனால், இந்த வேகன்சி செக் என்பது ரயில் கிளம்புவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு நடக்கும் நேரடி நிலவரம். யாராவது கடைசி நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்திருந்தாலோ அல்லது குறிப்பிட்ட ஒதுக்கீட்டில் சீட்டுகள் நிரம்பாமல் இருந்தாலோ, அந்த மறைந்திருக்கும் இடங்களை இதன் மூலம் பிடிக்க முடியும்.

Advertisement

டிப்ஸ்

டிக்கெட்டை உறுதி செய்வதற்கான சில டிப்ஸ்

மொபைல் ஆப் பயன்படுத்துங்கள்: பயணத்தின் போது உடனுக்குடன் நிலவரம் அறிய 'IRCTC Rail Connect' ஆப் மிகவும் வசதியானது. ரயில் நிலையம் வாரியாக சோதியுங்கள்: சில நேரங்களில் முழுப் பயணத்திற்கும் சீட் இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட இரண்டு ஸ்டேஷன்களுக்கு இடைப்பட்ட தூரத்திற்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. டிடிஇ உதவி: நீங்கள் ஏற்கனவே ரயிலில் ஏறிவிட்டீர்கள் என்றால், காலியாக உள்ள சீட்டை உங்கள் போனில் காண்பித்து டிடிஇ மூலம் முறைப்படி ரசீது பெற்று அந்த இருக்கையில் பயணிக்கலாம்.

Advertisement